Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/விவசாயிகள் விதை பரிசோதனை செய்ய அழைப்பு

விவசாயிகள் விதை பரிசோதனை செய்ய அழைப்பு

விவசாயிகள் விதை பரிசோதனை செய்ய அழைப்பு

விவசாயிகள் விதை பரிசோதனை செய்ய அழைப்பு

ADDED : செப் 19, 2011 12:28 AM


Google News
தர்மபுரி: தர்மபுரி மாவட்ட விவசாயிகள் விதையின் முளைப்பு திறனை அறிய விதை பரிசோதனை செய்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 'விளையும் பயிர் முளையிலே தெரியும்' என்பதற்கு ஏற்ப தரமான விதை உற்பத்தி செய்ய விதை உற்பத்தியாளர்கள் பயிர் விளைச்சலுக்கு தேவையான தொழில் நுட்பங்களை நல்ல முறையில் கடைபிடிக்க வேண்டும். தரமான விதை என்பது சான்று பெற்ற விதைகளாகும். அதாவது அவை குறிப்பிட்ட தர நிர்ணயித்துக்குள் புறத்தூய்மை, ஈரப்பதம் முளைப்பு திறன் மற்றும் பிற ரக கலப்பு ஆகியவற்றை கொண்டதாகும்.

உற்பத்தி செய்த விதைக்கு விதைசான்று பெறுவதற்கு விதையை சேமிப்பதற்கும் ஈரப்பதம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. ஒவ்வொரு பயிர் விதைக்கும் விதையில் அதிகபட்ச குறிப்பிட்ட ஈரப்பதம் மட்டும் இருக்கலாம். உததாரணத்துக்கு நெல்லுக்கு 13 சதவீதம், சிறு தானியத்துக்கு 12 சதவீதம், பருப்பு வகை பயிர் மற்றும் எண்ணெய் வித்து பயிர் விதைகளுக்கு 9 சதவீதம் மட்டுமே இருக்கலாம். இவ்வாறு அதிக பட்ச ஈரப்பதும் ஒவ்வொரு பயிருக்கும் மாறுபடும். சேமிக்கும் விதையில் குறிப்பிட்ட அளவு ஈரப்பத்துக்கு மேல் இருந்தால், விதை சேமிப்பின் போது, பூச்சி நோய் தாக்குதல் ஏற்பட்டு, விதையின் முளைப்புத்திறன் பாதிக்கப்படும். முளைப்பு திறன் பாதிக்கப்பட்டால் அந்த விதை விதைப்தற்கு ஏற்றதாக இருக்காது. அதனால், விதையின் முளைப்பு திறனை பாதுகாக்க விதையின் ஈரத்தன்மை அறிந்து விதைகளை தேவையான ஈரத்தன்மைக்கு கொண்டு வந்து சேமித்தால் விதைகள் நீண்ட நாட்களுக்கு சேமித்து வைக்க முடிகிறது. இத்தரத்தை நிர்ணயம் செய்வதில் விதை பரிசோதனை நிலையம் முக்கிய பங்கு வகிக்கிறது. விதை உற்பத்தியாளர்கள் மற்றும் விவசாயிகள் தங்களிடம் உள்ள விதையின் ஈரப்பதம் அறிந்து கொள்ள விதை குவியலில் இருந்து 100 கிராம விதை மாதிரி எடுத்து காற்றுபுகாத பாலித்தீன் பைகளில் அடைத்து, பயிர், ரகம், குவியல் எண் ஆகியவற்றை குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முளைப்பு திறன் மற்றும் புறத்தூய்மை ஆகிய விதை தரங்களை அறிந்து கொள்ள வேண்டியிருப்பின் தேவையான அளவு விதை மாதிரி எடுத்து ஈரப்பதம் அறிய வேண்டிய விதை மாதிரியுடன் இன்னொரு பையிலிட்டு பயிர், ரகம், குவியல் எண் ஆகியவற்றை குறிப்பிட்டு முகப்பு கடித்துடன் ஒரு மாதிரிக்கு 30 ரூபாய் வீதம் கட்டணத்துடன் நேரில் அல்லது தாபல் மூலம் அனுப்பி வைத்தால், விதை மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகள் உங்கள் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். விதை மாதிரிகளை, 'விதை பரிசோதனை அலுவலர், விதை பரிசோதனை நிலையம், கலெக்டர் அலுவல வளாகம், தர்மபுரி' என்ற முகவரியில் நேரில் அல்லது தபால் மூலம் அனுப்பி வைக்கலாம்.

இத்தகவலை தர்மபுரி விதை பரிசோதனை அலுவலர் கமலா தெரிவித்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us