/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/உயர் கல்வி உதவிக்காக ஊக்கத் தொகை திட்டம்உயர் கல்வி உதவிக்காக ஊக்கத் தொகை திட்டம்
உயர் கல்வி உதவிக்காக ஊக்கத் தொகை திட்டம்
உயர் கல்வி உதவிக்காக ஊக்கத் தொகை திட்டம்
உயர் கல்வி உதவிக்காக ஊக்கத் தொகை திட்டம்
ADDED : செப் 18, 2011 11:02 PM
சாத்தூர் : ''உயர்கல்விக்கு உதவுவதற்காகவே தமிழக முதல்வர் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை திட்டத்தை செயல்படுத்துகிறார்,'' என அமைச்சர் உதயக்குமார் பேசினார்.
சாத்தூர் அருகே என்.சுப்பையாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவில் 151 மாணவ, மாணவியர்களுக்கு கல்வி ஊக்கத்தொகையை வழங் தமிழக தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது: தமிழக பள்ளியில் படிக்கும் மாணவர்கள் இடை நிற்றல் கூடாது என்பதற்காக தமிழக முதல்வர் ஊக்கத் தொகை வழங்குகிறார். பணத்தை வங்கியில் டெபாசிட் செய்து, மேல் படிப்புக்கு செல்லும் போது வட்டியுடன் மாணவர்களுக்கு பணம் கிடைக்க தொலை நோக்குடன் திட்டத்தை செயல்படுத்தியுள்ளார். மாணவர்கள் உலகஅறிவு பெற இலவச லேப்டாப் வழங்கி வருகிறார். உலகளாவிய அறிவை தமிழக மாணவர்கள் பெற வேண்டும். தமிழக மாணவர்களிடம் இந்தியாவில் உள்ள மாணவர்கள் அனைவரும் சந்தித்து ஆலோசனை பெற வேண்டும் என திட்டங்களை முதல்வர் செயல்படுத்தி வருகிறார், என்றார். முன்னதாக விழாவிற்கு கலெக்டர் பாலாஜி தலைமை வகித்தார்.
அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் ராஜேந்திரபாலாஜி முன்னிலை வகித்தார்.ராமன் டி.ஆர்.ஓ., வரவேற்றார். முதன்மை கல்வி அலுவலர் விஷ்ணுபிரசாத் மற்றும் அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.