Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/அண்ணாதுரை பிறந்த நாள் பொதுக்கூட்டம்

அண்ணாதுரை பிறந்த நாள் பொதுக்கூட்டம்

அண்ணாதுரை பிறந்த நாள் பொதுக்கூட்டம்

அண்ணாதுரை பிறந்த நாள் பொதுக்கூட்டம்

ADDED : செப் 18, 2011 01:03 AM


Google News

நாமக்கல்: நகர அ.தி.மு.க., சார்பில், முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாள் பொதுக்கூட்டம், நாமக்கல்லில் நடந்தது.

நகரச் செயலாளரும், எம்.எல்.ஏ.,வுமான பாஸ்கர் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் காந்தி முருகேசன் வரவேற்றார். தொகுதி செயலாளர் மயில் சுந்தரம், முன்னாள் எம்.பி., அன்பழகன், ஒன்றிய செயலாளர் கரிகாலன், வக்கீல் பிரிவு செயலாளர் வக்கீல் பாலுசாமி, மாவட்ட மகளிரணி செயலாளர் வைரம் தமிழரசி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளரும், வருவாய்த்துறை அமைச்சருமான தங்கமணி பங்கேற்று பேசினார். நிகழ்ச்சியில், தொகுதி இணைச் செயலாளர் தென்னரசு, முன்னாள் எம்.எல்.ஏ., கலாவதி, மாவட்ட சிறுபான்மை பிரிவு இணைச்செயலாளர் லியாகத்அலி, மோகனூர் ஒன்றியச் செயலாளர் சிவசாமி, நிர்வாகிகள் பாலசுப்ரமணியன், சம்பத்குமார், சண்முகம், ஈஸ்வரன், பாலு, சண்முகம், ஷாஜகான், மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள், சார்பு மன்ற நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us