/உள்ளூர் செய்திகள்/சேலம்/தொழிலாளியை கடத்தி அடி, உதைமில் மேலாளர் உட்பட 6 பேர் கைதுதொழிலாளியை கடத்தி அடி, உதைமில் மேலாளர் உட்பட 6 பேர் கைது
தொழிலாளியை கடத்தி அடி, உதைமில் மேலாளர் உட்பட 6 பேர் கைது
தொழிலாளியை கடத்தி அடி, உதைமில் மேலாளர் உட்பட 6 பேர் கைது
தொழிலாளியை கடத்தி அடி, உதைமில் மேலாளர் உட்பட 6 பேர் கைது
ADDED : செப் 17, 2011 03:21 AM
நங்கவள்ளி: நங்கவள்ளி, பெரியசோரகை பஞ்., கீரியூர் கிராமத்தை சேர்ந்த
பெருமாள் மகன் சதீஷ்குமார் (19). இவர், சங்ககிரி அடுத்த வெப்படையில் உள்ள
'ரோகித்' என்ற தனியார் நூற்பாலையில் வேலை செய்தார். வெப்படையை சேர்ந்த்
ப்ரியா என்ற பெண்ணும், அதே நூற்பாலையில் வேலை செய்துள்ளார்.
இரு நாட்களுக்கு முன்பு, ப்ரியா நூற்பாலையில் வேலை செய்த பெரியசோரகை
பகுதியை சேர்ந்த சதீஷ் என்பவருடன் மாயமாகி விட்டதாக தெரிகிறது. பெயர்
மட்டுமே தெரிந்த நிலையில், கீரியூர் கிராமத்தை சேர்ந்த சதீஷ்குமாரை, கடந்த
14ம் தேதி நூற்பாலை மேலாளர் உள்பட ஆறுபேர் கும்பல், வாகனத்தில் அழைத்துச்
சென்று அடித்து உதைத்துள்ளனர்.பின்பு காயம் அடைந்த சதீஷ்குமாரை அழைத்துச்
சென்று வீட்டில் விட்டுள்ளனர். 'ப்ரியா என்ற பெண்ணை, சதீஷ் என்ற மற்றொரு
நபர் அழைத்து சென்று விட்டார்.
நூற்பாலை ஊழியர்கள் என்னை கடத்தி சென்று
தாக்கினர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, சதீஷ்குமார்,
நங்கவள்ளி போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார்.வழக்கு பதிவு செய்த நங்கவள்ளி
போலீஸார், பெயர் ஒரே மாதிரி இருந்ததால், ஆள்மாறாட்டத்தில் சதீஷ்குமாரை
கடத்திச் சென்று அடித்து உதைத்து சித்ரவதை செய்த வெப்படை கிராமத்தை சேர்ந்த
ரோகித் நூற்பாலை மேலாளர் மோகன் (33), சூப்பர்வைஸர் ராஜா (27),
தொழிலாளர்கள் ராஜ் (26), கோபால் (31), தங்கராஜ் (33), செல்வராஜ் (30)
ஆகியோரை கைது செய்தனர்.