Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/மீண்டும் தொடர்கிறது கந்துவட்டி கொடுமை

மீண்டும் தொடர்கிறது கந்துவட்டி கொடுமை

மீண்டும் தொடர்கிறது கந்துவட்டி கொடுமை

மீண்டும் தொடர்கிறது கந்துவட்டி கொடுமை

ADDED : செப் 16, 2011 01:25 AM


Google News

மதுரை : ''நுண்கடன் நிறுவனங்களின் மூலம் கந்துவட்டி கொடுமை தமிழகத்தில் மீண்டும் பரவலாகி வருகிறது,'' என, மதுரை தானம் அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் வாசிமலை தெரிவித்தார்.நிருபர் சந்திப்பில் அவர் கூறியதாவது: ஐந்தாண்டுகளுக்கு முன் வரை, மதுரையின் நகர்ப் பகுதிகளில் கந்துவட்டி கொடுமை அதிகமாக இருந்தது.

குறிப்பாக செல்லூர் போன்ற பகுதிகளில் பாதிக்கப்பட்டோர் ஏராளம். சுயஉதவிக் குழுக்கள் வங்கிக்கடன் பெற ஆரம்பித்ததும், கந்துவட்டி கொடுமை குறைய ஆரம்பித்தது. அறக்கட்டளையின் களஞ்சியம் அமைப்பின் மூலம் பெண்களை ஒருங்கிணைத்து, கந்துவட்டி வாங்குவதிலிருந்து விடுவித்தோம். தற்போது 'நுண்கடன் நிறுவனங்கள்' பெயரில் மீண்டும் கந்துவட்டி ஆரம்பித்துள்ளது. குழுப் பெண்களை அணுகி, அதிகபட்சமாக 15ஆயிரம் ரூபாய் வரை உடனடி கடன் தருவதாக ஆசைகாட்டுகின்றனர். கூடுதல் வட்டியை அறியாமல், கைநீட்டி கடன் வாங்கிய பின், பெண்கள் தவிக்கின்றனர்.வங்கிகள் சிறுசிறு குழுவுக்கு கடன் தருவதற்கு பதிலாக, இத்தகைய நுண்கடன் நிறுவனங்களுக்கு அதிகதொகையை கடனாக தருகின்றனர். இந்நிறுவனங்கள் குறைந்தவட்டிக்கு பணம் வாங்கி, 40 சதவீத வட்டி வசூலிக்கின்றனர். இவற்றை ஒழுங்குபடுத்த, ஆணையம் எதுவுமில்லாததால், தமிழகம் முழுதும் இப்பிரச்னை பரவியுள்ளது, என்றார். ஒருங்கிணைப்பாளர் அகிலாதேவி கூறுகையில்,''வட்டி கொடுக்காவிட்டால் செப்டிக் டாங்கிற்குள் நிற்க வைத்த கொடுமை, மதுரை புதூரில் நடந்துள்ளது. உறவினர் வீடுகளுக்கு வந்து அடாவடி செய்கின்றனர். போலீஸ் ஸ்டேஷனில் இக்கொடுமைகள் குறித்து புகார் கொடுக்கும் அளவிற்கு, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு இல்லை,'' என்றார்.முதன்மை நிர்வாகி பத்மாவதி, காந்திகிராம் பல்கலை முன்னாள் துணைவேந்தர் பங்கஜம் பங்கேற்றனர். கந்துவட்டியால் பாதிக்கப்பட்டு மீண்ட பெண்கள் செந்தாமரை (பங்கஜம் காலனி), தெய்வானை (திடீர்நகர்), ரோஷன் (செல்லூர்) அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us