/உள்ளூர் செய்திகள்/சேலம்/பாரப்பட்டி சுரேஷ்குமார் உட்பட 3 பேரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க மனுபாரப்பட்டி சுரேஷ்குமார் உட்பட 3 பேரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க மனு
பாரப்பட்டி சுரேஷ்குமார் உட்பட 3 பேரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க மனு
பாரப்பட்டி சுரேஷ்குமார் உட்பட 3 பேரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க மனு
பாரப்பட்டி சுரேஷ்குமார் உட்பட 3 பேரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க மனு
ADDED : செப் 15, 2011 02:24 AM
சேலம்: சேலம், கோயம்புத்தூர் ஜூவல்லர்ஸ் நில அபகரிப்பு வழக்கில் கைதான, பாரப்பட்டி சுரேஷ்குமார், வக்கீல் தெய்வலிங்கம், பிரகாஷ் ஆகிய மூன்று பேரையும், போலீஸ் காவலில் விசாரிக்க மனு அளிக்கப்பட்டுள்ளது.சேலம், முதல் அக்ரஹாரத்தில் உள்ள கோயம்புத்தூர் ஜூவல்லர்ஸ் உரிமையாளர்கள் பிரேம்நாத், ஸ்ரீநாத்.
இவர்களுக்கு சொந்தமான சேலம் அங்கம்மாள் காலனி அருகில், 12 ஆயிரத்து 676 சதுர அடி நிலத்தை ஆக்கிரமிக்க முயற்சி செய்ததோடு, அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக, மாஜி அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் உள்ளிட்டோர் மீது புகார் கொடுத்திருந்தனர்.இப்புகாரின் மீது விசாரணை நடத்திய மாநகர மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மனோகரன், கடந்த செப்டம்பர் 4ம் தேதி, 16 பேர் மீது வழக்கு பதிவு செய்தார்.அன்றைய தினம் இரவே, இந்த வழக்கில் தொடர்புடைய வக்கீல் தெய்வலிங்கம், பிரகாஷ் உள்ளிட்ட எட்டு பேரை, சேலம் மாநகர போலீஸார் கைது செய்தனர். மேலும், சஸ்பெண்ட் இன்ஸ்பெக்டர் லட்சுமணன், கவுன்சிலர் ஜிம் ராமு, பாரப்பட்டி சுரேஷ்குமார், மாஜி அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.இவ்வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் பாரப்பட்டி சுரேஷ்குமார், வக்கீல் தெய்வநாயகம், பிரகாஷ் ஆகிய மூன்று பேரையும், போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்கும்படி, ஜே.எம்., எண் 2ல், மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீஸார் மனுதாக்கல் செய்துள்ளனர்.இம்மனு மீதான விசாரணை, செப்டம்பர் 16ம் தேதிக்கு மாஜிஸ்திரேட்(பொறுப்பு) ஸ்ரீவித்யா ஒத்தி வைத்தார்.


