Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/தார் பாய் போடாமல் செல்லும் மணல் லாரிகளுக்கு எச்சரிக்கை

தார் பாய் போடாமல் செல்லும் மணல் லாரிகளுக்கு எச்சரிக்கை

தார் பாய் போடாமல் செல்லும் மணல் லாரிகளுக்கு எச்சரிக்கை

தார் பாய் போடாமல் செல்லும் மணல் லாரிகளுக்கு எச்சரிக்கை

ADDED : செப் 14, 2011 01:16 AM


Google News
நாமக்கல்: 'தார்பாய் போடாமல் செல்லும் மணல் லாரிகள், போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைக்கப்படும்' என, மாநில லாரி உரிமையாளர் சம்மேளனத் தலைவர் தெரிவித்தார்.தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் நல்லதம்பி, தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்கச் செயலாளர் மணி உள்ளிட்ட நிர்வாகிகள், நேற்று மாலை 5 மணியளவில் மோகனூர் சாலை வழியாக நாமக்கல்லுக்கு வந்துள்ளனர்.

அப்போது, அவ்வழியாக ஏராளமான மணல் லாரிகள் திறந்த நிலையில் வந்துள்ளது.அந்த மணல் லாரிகளை தடுத்து நிறுத்திய, லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள், தார் பாய் போடாமல் மணல் லாரிகள் செல்வதால், பின்னால் வாகனங்களில் வருவோர் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, தார்பாய் போட்ட பின் லாரிகளை எடுத்து செல்லும்படி அறிவுறுத்தினர்.தகவல் அறிந்து மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் செல்லராசாமணி உள்ளிட்டோர் அங்கு வந்துள்ளனர். அப்போது, இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதையடுத்து, மணல் லாரி உரிமையாளர் சம்மேளனத் தலைவர் செல்வராசாமணி தலைமையிலானோர், மோகனூர் சாலை லத்துவாடி பிரிவு சாலையில் மறியலில் ஈடுபட முயன்றனர்.மோகனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, மறியலில் ஈடுபட்டோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி, சமரசம் செய்தனர். அதையடுதது மறியல் கைவிடப்பட்டது.இதுகுறித்து, மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் நல்லதம்பி தெரிவித்தாவது:மணல் லாரிகள் தார்பாய் போடாமல் திறந்த நிலையில் செல்வதால், மணல் காற்றில் பறந்து, பின்னால் வரும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. தவிர, உயிரிழப்பும் ஏற்படுகிறது. எனவே, மணல் லாரிகள் தார் பாய் போட்டுத்தான் சாலையில் வரவேண்டும். தார்பாய் போடாத லாரிகள் பிடிக்கப்பட்டு, அருகே உள்ள போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைப்படும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us