ADDED : செப் 12, 2011 02:10 AM
கரூர் மாவட்டம் செல்லாண்டிபாளையம் மேற்கு தெருவை சேர்ந்தவர்
ஆறுமுகம் (61).
இவர் கட்டிடத் தொழில் செய்து வருகிறார். கடந்த ஒன்பதாம்
தேதி வீட்டை பூட்டி விட்டு ஆறுமுகம் வேலைக்கு சென்று விட்டார். மாலையில்
வீட்டுக்கு வந்து பார்த்தபோது, வீட்டுக்கதவு உடைக்கப்பட்டிருந்தது. மேலும்,
பீரோவில் இருந்த மூன்று பவுன் நகையை திருடப்பட்டிருந்தது. இதுகுறித்து
ஆறுமுகம் பசுபதிபாளையம் போலீஸில் அளித்த புகாரின் பேரில், போலீஸார்
விசாரிக்கின்றனர்.