ADDED : செப் 11, 2011 10:19 PM
சிறுபாக்கம் : நீர்வழி, நிலவழி திட்ட கோமுகி உபவடி நிலப்பகுதி விவசாயிகள் கலந்துரையாடல் கூட்டம் வேப்பூரில் நடந்தது.
வேளாண் துணை இயக்குனர் (வணிகம்) தனவேல் தலைமை தாங்கினார். வேளாண் இணை இயக்குனர் இளங்கோவன், உதவி பேராசிரியர் கண்ணன், தோட்டக்கலைத் துறை உதவி இயக்குனர் முருகன் முன்னிலை வகித்தனர். வேளாண் அலுவலர் (வணிகம்) அமுதா வரவேற்றார். விவசாயிகளுக்கு விளைந்த விளைபொருட்களை பதப்படுத்துதல், கொள்முதல், விதைகள், விளை பொருட்கள் உற்பத்தியை அதிகரித்தல் உள்ளிட்டவை குறித்து கலந்துரையாடல் நடந் தது. சேமிப்பு கிடங்கு மேலாளர் அண்ணாதுரை, சுகுணா பவுண்ட்ரி பார்ம் மேலாளர் சிவமூர்த்தி, திருச்சி ராலிஸ் திட்ட மேலாளர் வீரமணி, இதயம் நல்லெண்ணெய் மேலாளர் தங்கராசு, மாடர்ன் ரைஸ்மில் பச்சமுத்து, வேளாண் அலுவலர் சித்ரா உட்பட பலர் பேசினர். கூட்டத்தில் விவசாயிகளுக்கு கையேடுகளும், சிறப்பு பரிசும் வழங்கப்பட்டன.