ADDED : செப் 07, 2011 11:44 PM
சென்னை: 'சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தி.மு.க.,வினர் சுகவாசம் அனுபவிக்கின்றனர்' என்ற தே.மு.தி.க., உறுப்பினரின் பேச்சுக்கு, சட்டத்துறை அமைச்சர் செந்தமிழன் விளக்கம் அளித்தார்.
சட்டம் மற்றும் நீதித்துறை விவாதங்களுக்கு அமைச்சர் செந்தமிழன் பதிலளித்த போது, ''நில அபகரிப்பு புகார்கள் தொடர்பாக, வீரபாண்டி ஆறுமுகம், நேரு, பொன்முடி, பொட்டு சுரேஷ் உட்பட பல தி.மு.க.,வினர் கைது செய்யப்பட்டு, சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக, ஜனாதிபதியை சந்தித்து, தமிழக அரசு மீது தி.மு.க.,வினர் மனு அளித்துள்ளனர். இதில் இருந்தே, சிறைகளில் தி.மு.க.,வினர் எப்படி நடத்தப்படுகின்றனர் என்பதை புரிந்து கொள்ளலாம்,'' என்று தெரிவித்தார்.