ADDED : செப் 03, 2011 01:20 AM
செய்துங்கநல்லூர்: கருங்குளம் யூனியனில் மண்மாதிரி சேகரிப்பு முகாம் நடந்து
வருவதாக வேளாண்மை உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.கருங்குளம் யூனியன்
வேளாண்மை உதவி இயக்குனர் கிருஷ்ணபிள்ளை வெளியிட்டுள்ள அறிவிப்பில்
கூறியிருப்பதாவது, கருங்குளம் யூனியனில் ஒவ்வொரு கிராமத்திலும் வேளாண்மைத்
துறையின் அலுவலர்கள் வந்து மண்மாதிரிகளை சேமித்துக் கொண்டிருக்கின்றனர்.
விவசாயிகள் தங்கள் நிலத்திலுள்ள மண்மாதிரி எடுத்து பரிசோதனை செய்து பயனடைய
கேட்டுக் கொள்கிறேன். மண்மாதிரிகளை பரிசோதனை செய்து நம் நிலத்தின் மண்
வளத்தை தெரிந்து கொண்டால் அதற்கேற்ப விவசாயம் செய்து குறைந்த செலவில் அதிக
மகசூல் செய்ய வழி செய்கிறது.
எடுத்துக்காட்டாக தங்கள் நிலத்தில்
மனிச்சத்து, தழைச்சத்து போன்ற சத்துகளில் ஏதாவது ஒன்று அல்லது இரண்டு
கூடுதலாக இருந்தால் நாம் இடும் உரத்தின் அளவுகளை குறைத்துக் கொள்ளலாம்.
இதனால் செலவு குறைகிறது. அதேபோல் எந்த வகை பயிர் இந்த மண்ணுக்கு உகந்தது
என்று தெரிந்து பயிரிடலாம்.இது போன்ற பல நன்மைகள் கிடைக்க கூடிய பரிசோதனை
இலவசமாக செய்யப்படுகிறது. எனவே விவசாயிகள் தங்கள் பகுதி உதவி வேளாண்மை
அலுவலர்களை அணுகி மேலும் விபரங்களை தெரிந்து கொண்டு பயனடைய கேட்டுக்
கொள்கிறேன் இவ்வாறு கூறியுள்ளார்.