Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/மண்டல அளவிலான கால்பந்து போட்டி: எம்.ஐ.டி., அணி சாதனை

மண்டல அளவிலான கால்பந்து போட்டி: எம்.ஐ.டி., அணி சாதனை

மண்டல அளவிலான கால்பந்து போட்டி: எம்.ஐ.டி., அணி சாதனை

மண்டல அளவிலான கால்பந்து போட்டி: எம்.ஐ.டி., அணி சாதனை

ADDED : ஆக 30, 2011 01:10 AM


Google News

ராசிபுரம்: மண்டல அளவிலான கால்பந்து போட்டியில், எம்.ஐ.டி., அணி வெற்றி பெற்று கோப்பையை வென்றது.

சேலம் மண்டல அளவிலான, பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு இடையேயான கால்பந்து போட்டி, ராசிபுரம் முத்தாயம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில், மூன்று நாட்கள் நடந்தது.

போட்டியில், மண்டல அளவில் உள்ள, 19 பாலிடெக்னிக் கல்லூரிகளை சேர்ந்த அணிகள் பங்கேற்றன. போட்டிகள் அனைத்தும், 'நாக் அவுட்' முறையில் நடத்தப்பட்டன. அதில், முதலாவது அரையிறுதிப் போட்டியில் டி.பி.சி., பாலிடெக்னிக் கல்லூரியும், எம்.ஐ.டி. கல்லூரி அணியும் விளையாடிது. அதில், எம்.ஐ.டி. அணி வெற்றி பெற்றது.



இரண்டாவது அரையிறுதி போட்டியில், ஆர்.ஐ.டி., அணியும், சேலம் கொங்கு பாலிடெக்னிக் அணியும் விளையாடியது. அதில், ஆர்.ஐ.டி. அணி வெற்றி பெற்றது. இறுதி போட்டியில், எம்.ஐ.டி. அணியும், ஆர்.ஐ.டி., அணியும் விளையாடிது. முடிவில், எம்.ஐ.டி. அணி வெற்றி பெற்று சாதனை படைத்தது. வெற்றி பெற்ற அணிகளுக்கு, முத்தாயம்மாள் கல்வி அறக்கட்டளைத் தாளாளர் ராமசாமி பரிசும், கேடயமும் வழங்கினார். நிகழ்ச்சியில், கல்லூரிச் செயலாளர் ஜெயப்பிரகாஷ், முதல்வர் விஜயகுமார், உடற்கல்வி இயக்குனர் துரைசாமி, ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் உள்பட பலர் பங்கேற்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us