/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/தோட்டக்கலை துறை மூலம் 20 லட்சம் மாங்கன்று வினியோகம்தோட்டக்கலை துறை மூலம் 20 லட்சம் மாங்கன்று வினியோகம்
தோட்டக்கலை துறை மூலம் 20 லட்சம் மாங்கன்று வினியோகம்
தோட்டக்கலை துறை மூலம் 20 லட்சம் மாங்கன்று வினியோகம்
தோட்டக்கலை துறை மூலம் 20 லட்சம் மாங்கன்று வினியோகம்
ADDED : ஆக 29, 2011 11:21 PM
காரைக்குடி:நேமம் அரசு தோட்டக்கலை பண்ணையில் இந்த ஆண்டு 20 லட்சம் 'அல்போன்சா' மாங்கன்றுகள் விநியோகம் செய்யப்பட உள்ளதாக, தோட்டக்கலை அலுவலர் தியாகராஜன் தெரிவித்தார்.அவர் கூறுகையில்,'' நேமம் அரசு தோட்டக்கலை பண்ணையில், வறட்சிக்கு இலக்காகும் திட்டத்தில் உயர் ரக தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்கி றோம்.
இம்மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில், கோவை விவசாய பல்கலையில் கண்டுபிடித்த, மா, கொய்யா, சப்போட்டா, நெல்லி, முந்திரி, மாதுளை ஆகிய மரக்கன்றுகளும், மல்லிகை, செம்பருத்தி, குரோட்டன்ஸ் போன்ற அழகு செடிகளும், தேக்கு, சவுக்கு, யூக்கலிப்டஸ், வேம்பு, புங்கன் போன்ற மரக்கன்றுகள் விற்கப்படுகிறது.இதுதவிர, நடப்பாண்டு 20 லட்ச 'அல்போன்சா' ரக மாங்கொட்டைகளை பண்ணையில் விதைத்துள்ளோம். அதில் இருந்து, 4 லட்சம் 'மா வேர்' செடிகள் எடுக்கப்பட்டு, அதனை மா மென்தண்டு ஒட்டு கட்டப்பட்டு ஒரு லட்சத்து 50 ஆயிரம் மா ஒட்டு செடிகள் விநியோகிக்க தயார் நிலையில் வைத்துள்ளோம்,'' என்றார்.