/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/தமிழகத்திற்கு விரைவில் புதிய தலைவர்காங்., சீரமைப்புக்குழு அமைப்பாளர் உறுதிதமிழகத்திற்கு விரைவில் புதிய தலைவர்காங்., சீரமைப்புக்குழு அமைப்பாளர் உறுதி
தமிழகத்திற்கு விரைவில் புதிய தலைவர்காங்., சீரமைப்புக்குழு அமைப்பாளர் உறுதி
தமிழகத்திற்கு விரைவில் புதிய தலைவர்காங்., சீரமைப்புக்குழு அமைப்பாளர் உறுதி
தமிழகத்திற்கு விரைவில் புதிய தலைவர்காங்., சீரமைப்புக்குழு அமைப்பாளர் உறுதி
ADDED : ஆக 22, 2011 02:32 AM
திருநெல்வேலி:'தமிழக காங்., கிற்கு விரைவில் புதிய தலைவர்
நியமிக்கப்படுவார்' என சீரமைப்புக்குழு அமைப்பாளர் இதாயதுல்லா
தெரிவித்தார்.நெல்லையில் காங்., சீரமைக்குழு அமைப்பாளர் இதாயதுல்லா
கூறியதாவது:கடந்த சட்டசபைத்தேர்தலில் நடந்த குளறுபடிகள், தேர்தல் தோல்வி
காரணமாக அகில இந்திய தலைமை நீக்கும் முன்பே மாநில தலைவர் பதவியில் இருந்து
தங்கபாலு ராஜினாமா செய்தார். தற்போது அட்காக் கமிட்டி தலைவராக உள்ள அவர்
நடைமுறை பணிகளை மட்டும் கவனிக்காமல் மாவட்டத்தலைவர்களை நியமித்தார். சில
தலைவர்களை நீக்கி மீண்டும் குளறுபடிகளை செய்தார்.இதை எதிர்த்த
சீரமைப்புக்குழுவை சேர்ந்த தியாகி வடிவேலு, மாநில செயலாளர் ஜோதி ராமலிங்கம்
மற்றும் என்னை (இதாயதுல்லா) கட்சியில் இருந்து நீக்கினார். அகில இந்திய
கமிட்டி உறுப்பினர்களை நீக்கும் அதிகாரம் கட்சித்தலைவி சோனியாவிற்கு
மட்டுமே உண்டு. அப்படி நீக்கினால் அகில இந்திய காங்., கட்சியின் அடுத்த
பொதுக்குழுவில் ஒப்புதல் பெற வேண்டும்.இதை அறிந்தும் கட்சித்தலைமைக்கு
எதிராக தங்கபாலு செயல்பட்டார்.
சத்தியமூர்த்தி பவனில் சோனியா நலம் பெற
வேண்டிய நடத்தப்படவிருந்த பிரார்த்தனைக்கூட்டத்தை தடுத்தார். காங்.,
அறக்கட்டளை கல்வி உதவித்தொகை வழங்குவதில் முறைகேடுகள் நடந்துள்ளது.
இதுகுறித்து அகில இந்திய தலைமைக்கு புகார் அளிக்கப்பட்டது. 'தங்கபாலு மீது
நடவடிக்கை எடுக்கப்படும், வெகு விரைவில் புதிய தலைவர் நியமிக்கப்படுவார்'
என தலைமை உறுதியளித்துள்ளது.உள்ளாட்சித்தேர்தலில் சட்டசபைத்தேர்தலை போல
சீட்கள் விற்கப்படாமல் இருப்பதற்கும், தகுதி உள்ளவர்களுக்கு சீட்
கிடைக்கவும் தங்கபாலு தலைவராக இருக்கக்கூடாது என மூத்த தலைவர்கள், மத்திய
அமைச்சர்கள் விரும்புகின்றனர். தங்கபாலுவை மாற்றும் எங்கள் போராட்டம்
லகுவாகி விட்டது.புதிய சட்டசபைக்கட்டடத்தில் உயர்தர ஆஸ்பத்திரி,
மருத்துவக்கல்லூரி துவக்கப்படவிருப்பதை வரவேற்கிறோம். ஆஸ்பத்திரிக்கு
இந்திராகாந்தி பெயர் சூட்ட வேண்டும். அன்னாஹசாரே தரப்பிடம் ஓரிரு நாட்களில்
பிரதமர் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். பிரச்னைக்கு தீர்வு
கிடைக்கும்.இவ்வாறு இதாயதுல்லா தெரிவித்தார்.