ADDED : ஆக 22, 2011 01:46 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணம் வைத்து சீட்டாடிய, 34 பேரை ஒரே நாளில் போலீஸார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி., கண்ணன் உத்தரவுபடி, மாவட்டம் முழுவதும்
போலீஸார் பணம் வைத்து, சீட்டாடுபவர்களை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை
நடத்தினர். கிருஷ்ணகிரி டவுன் எஸ்.ஐ., உமாசங்கர் தலைமையிலான போலீஸார்,
பழையபேட்டை சுடுகாடு அருகே ரோந்து சென்ற போது, அங்கு பணம் வைத்து சீட்டாடி
கொண்டிருந்த பிரதாப்(29), நிசார்(35), இப்ராகிம்(50) ஆகிய மூன்று பேரையும்
கைது செய்தனர்.
பர்கூர் எஸ்.ஐ., கோவிந்தசாமி மற்றும் போலீஸார் துரைஸ் தியேட்டர் பகுதியில்
ரோந்து சென்ற போது, அங்கு சீட்டாடி கொண்டிருந்த கோபி(20), செல்வராஜ்(35),
ஏழுமலை(35) ஆகியோரை கைது செய்தனர். இதே போல் ஓசூர் அட்கோ, சூளகிரி,
வேப்பனப்பள்ளி, குருபரப்பள்ளி, கந்திகுப்பம், காவேரிப்பட்டணம், பாகலூர்,
ஆகிய போலீஸ் ஸ்டேசன்களுக்கு உட்பட்ட பகுதியில் போலீஸார் ரோந்து சென்று பணம்
வைத்து சீட்டாடி கொண்டிருந்த மொத்தம், 34 பேரை ஒரே நாளில் கைது செய்தனர்.