/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/மத்தூர் திரவுபதி அம்மன் கோவில் ஆடித் திருவிழாமத்தூர் திரவுபதி அம்மன் கோவில் ஆடித் திருவிழா
மத்தூர் திரவுபதி அம்மன் கோவில் ஆடித் திருவிழா
மத்தூர் திரவுபதி அம்மன் கோவில் ஆடித் திருவிழா
மத்தூர் திரவுபதி அம்மன் கோவில் ஆடித் திருவிழா
ADDED : ஆக 16, 2011 03:44 AM
திருத்தணி : மத்தூர் மற்றும் தும்பிகுளம் திரவுபதி அம்மன் கோவில்களில், தீ மிதி திருவிழா கோலாகலமாக நடந்தது.
திருத்தணி அடுத்த, மத்தூர் திரவுபதி அம்மன் கோவிலில், 66ம் ஆண்டு தீ மிதி திருவிழா, 6ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலையில், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. பிற்பகல் 3 மணிக்கு, அம்மையார் குப்பம் கிருஷ்ணன், செல்வம் ஆகியோரின் மகாபாரதச் சொற்பொழிவும், இரவு 7 மணிக்கு அம்மன் திருவீதி உலாவும், இரவு 10 மணிக்கு ஓம் சக்திவேல் குழுவினரின், மகாபாரத நாடகமும் நடந்தது. விழாவின் நிறைவு நாளான நேற்று முன்தினம், தீ மிதி திருவிழா நடந்தது. விழாவையொட்டி, காலை 8 மணிக்கு துரியோதனன் படுகளம் நடந்தது. தொடர்ந்து, பெண்கள் கோவில் வளாகத்தில், பொங்கல் வைத்து அம்மனுக்கு படையலிட்டு வழிபட்டனர். மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 6 மணிக்கு, ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்புக் கட்டி தீ மிதித்து, நேர்த்திக் கடனைச் செலுத்தினர். இரவு 8 மணிக்கு, திரவுபதி அம்மன் திருவீதியுலாவும், இன்னிசைக் கச்சேரியும் நடந்தது. விழா ஏற்பாடுகளை ஊராட்சித் தலைவர் முனிரத்தினம்மாள், கவுன்சிலர் பிரேமா தலைமையில், விழாக் குழுவினர் செய்திருந்தனர். அதே போல், தும்பிகுளம் திரவுபதி அம்மன் கோவிலில், தீ மிதி திருவிழா நடந்தது. இதில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் காப்புக் கட்டி, தீ மிதித்தனர்.