/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/திருப்பதி செல்லும் பஸ்கள் திருவள்ளூர் மணவாள நகரில் நிறுத்த கோரிக்கைதிருப்பதி செல்லும் பஸ்கள் திருவள்ளூர் மணவாள நகரில் நிறுத்த கோரிக்கை
திருப்பதி செல்லும் பஸ்கள் திருவள்ளூர் மணவாள நகரில் நிறுத்த கோரிக்கை
திருப்பதி செல்லும் பஸ்கள் திருவள்ளூர் மணவாள நகரில் நிறுத்த கோரிக்கை
திருப்பதி செல்லும் பஸ்கள் திருவள்ளூர் மணவாள நகரில் நிறுத்த கோரிக்கை
ADDED : ஆக 16, 2011 03:44 AM
திருவள்ளூர் : சென்னையில் இருந்து திருவள்ளூர் வழியாக திருப்பதிக்கு இயக்கப்படும் அரசு பஸ்களுக்கு மணவாள நகரில் நிறுத்தம் வேண்டும் என, பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை, கோயம்பேட்டில் இருந்து திருப்பதிக்கு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், விழுப்புரம் கோட்டம் சார்பில் இயக்கப்படும் பஸ் தடம் எண் 201, திருவள்ளூர் வழியாக இயக்கப்படுகின்றன. இந்த பஸ்கள், திருவள்ளூர் ஜெ.என் சாலை உழவர் சந்தை அருகே நிறுத்தப்படுகின்றன. இதனால், மணவாள நகரில் இறங்க வேண்டிய பயணிகள் குறிப்பாக இரவு நேரங்களில் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும், திருப்பதியில் இருந்து வரும் இந்த பஸ்களில் திருவள்ளூருக்கு அடுத்தபடியாக பூந்தமல்லிக்குத்தான் (ஸ்டேஜ்) டிக்கெட் வழங்கப்படுகிறது. இதனால், பயணிகள் திருவள்ளூர் பஸ் நிலையத்துக்கு அடுத்து உள்ள மணவாள நகரில் இறங்க வேண்டுமென்றால், பூந்தமல்லி வரை டிக்கெட் வாங்கிக் கொண்டு மணவாள நகரில் இறங்க வேண்டியுள்ளது. மேலும், ஆவடி, அம்பத்தூர், பட்டாபிராம், திருநின்றவூர் ஆகிய ஊர்களில் வசிப்பவர்கள், திருப்பதிக்கு பஸ்களில் செல்ல வேண்டுமெனில் கோயம்பேட்டிற்கு செல்வதற்கு பதிலாக, திருவள்ளூருக்கு வந்துதான் பஸ் பிடிக்கின்றனர். மணவாள நகரில் பஸ்கள் நிறுத்தப்பட்டால் எளிதில் பிடித்து விடுவர். ஆனால், அவர்கள் தற்போது ஜெ.என். சாலையில் உள்ள பஸ் நிறுத்தத்துக்கு செல்ல, ஆட்டோ பிடித்துச் செல்ல வேண்டியுள்ளது. இதுகுறித்து, விழுப்புரம் கோட்டம் அரசு போக்குவரத்துக் கழக அதிகாரி ஒருவர் கூறும் போது, ''இதுவரை இப்பிரச்னையை எங்கள் கவனத்துக்கு யாரும் கொண்டு வரவில்லை. கூடிய விரைவில் இப்பிரச்னைக்கு தீர்வு காணப்படும்,'' என்றார்.


