/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/புனித தோமையார் ஆலய 125ம் ஆண்டு நிறைவு விழாபுனித தோமையார் ஆலய 125ம் ஆண்டு நிறைவு விழா
புனித தோமையார் ஆலய 125ம் ஆண்டு நிறைவு விழா
புனித தோமையார் ஆலய 125ம் ஆண்டு நிறைவு விழா
புனித தோமையார் ஆலய 125ம் ஆண்டு நிறைவு விழா
ADDED : ஆக 15, 2011 01:18 AM
திருச்செந்தூர் : திருச்செந்தூர் அருகே வீரபாண்டியன்பட்டணம் புனித தோமையார் ஆலய 125வது ஆண்டு நிறைவு விழாவும், பரலோக மாதா திருவிழாவும் இன்று நடக்கிறது.வீரபாண்டியன்பட்டணம் புனித தோமையார் ஆலய 125 வது ஆண்டு விழா கடந்த 6ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி சிறப்பாக நடந்து வருகிறது.
விழா நாட்களில் தினசரி சிறப்பு திருப்பலி பூஜைகளும், கலைநிகழ்ச்சிகளும் நடந்து வருகிறது. விழாவின் சிகர நாளான இன்று காலை 6.30 மணிக்கு பேராயர் பீற்றர் பர்னாந்து திருவிழா சிறப்பு கூட்டு திருப்பலி, முதல் திருவிருந்தை நடத்துகிறார். மாலை 5.30 மணிக்கு பரலோகமாதா தேரில் திருப்பலி நடக்கிறது. நாளை 16ம் தேதி காலை 6 மணிக்கு திருப்பலி மற்றும் கொடியிறக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இந்நிகழ்ச்சியை ஆயர் பீட்டர் ரெமிநியூஸ் நடத்துகிறார். மாலை 7 மணிக்கு நிறைவு விழா நடக்கிறது. விழாவில் ஃப்ரியங்கா குருப் ஆஃப் கம்பெனி சேர்மன் அலாஷியஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழா மலரை வெளியிடுகிறார். அகில இந்திய பரதர் நல பேரவை தலைவர் (மும்பை) ஆல்பர்ட் ராயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.


