Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவாரூர்/வேலித்தகராறில் வெட்டுக்குத்து தந்தை, இரண்டு மகன்கள் கைது

வேலித்தகராறில் வெட்டுக்குத்து தந்தை, இரண்டு மகன்கள் கைது

வேலித்தகராறில் வெட்டுக்குத்து தந்தை, இரண்டு மகன்கள் கைது

வேலித்தகராறில் வெட்டுக்குத்து தந்தை, இரண்டு மகன்கள் கைது

ADDED : ஆக 15, 2011 01:16 AM


Google News
மன்னார்குடி: கூத்தாநல்லூர் அருகே உள்ள சேகரை கிராமத்தில் இடத்தகராறு காரணமாக ஏற்பட்ட மோதலில், மூன்று பேரை கத்தியால் குத்தி, அரிவாளால் வெட்டிய மூவரை போலீஸார் கைது செய்தனர்.

மன்னார்குடி அருகே சேகரை கிராமத்தில் வசிக்கும் சுப்பையா மகன் பாண்டியன் (35). இவர் வீட்டின் அருகில் வசிக்கும் குமரவேல் மகன் செல்வராஜ் (46). இவர்களுக்கு இடையே நீண்ட நாட்களாக வேலித்தகராறு இருந்தது. நேற்று முன்தினம் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, கோஷ்டி சண்டையாக மாறியது. செல்வராஜ் தரப்பினர், பாண்டியன் ஆதரவாளர்களான சுப்பையன் (60), வெள்ளையன் மகன் கார்த்திகேயன் (35), மருதையன் மகன் மனோகரன் (38) ஆகியோரை கத்தியால் குத்தி, அரிவாளால் வெட்டிவிட்டு, தப்பியோடிõனர். படுகாயமடைந்த மூவரும், திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மோதல்குறித்து கூத்தாநல்லூர் போலீஸார் வழக்குபதிவு செய்து, செல்வராஜ், அவரது மகன்கள் மகேஷ் (28), சதீஷ் (26) ஆகிய மூவரையும் கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us