ADDED : ஆக 14, 2011 02:37 AM
கோவை : நவீன கட்டடக் கலை மற்றும் கட்டுமான பொருட்களின் விற்பனை கண்காட்சி,
கோவை பத்மாவதி அம்மாள் கல்சுரல் சென்டரில் நேற்று
துவங்கியது.'இன்னோவேட்டிவ் பிஸினஸ் பேர்' சார்பில் நடத்தப்படும்
'கன்ஸ்ட்ரக்ஷன் 2011' என்னும் இக்கண்காட்சியில், கட்டுமான துறைக்கு தேவையான
இயந்திரங்கள், உள் மற்றும் வெளி அலங்கார பொருட்கள், வீடுகள், அடுக்கு மாடி
குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்களில் பயன்படுத்தும், டைல்ஸ்,
மார்பிள்கள், கிரானைட்டுகள், பாத்ரூம் பிட்டிங்குகள், இறக்குமதி
பர்னிச்சர்கள், மாடுலர் கிச்சன் கேபினட்டுக்கள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள்
இடம் பெற்றுள்ளன.புதிதாக வீடு வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு
உதவும் நோக்கத்தோடு பிராபர்டி டெவலப்பர்ஸ், ரியல் எஸ்டேட் நிறுவனங்கள்,
வீட்டுக்கடன் உதவி வழங்கும் வங்கிகள், கட்டடக்கலையின் நவீன வளர்ச்சி
குறித்த ஆலோசனை மையங்கள் ஆகியன இங்கு அமைக்கப்பட்டுள்ளன. கண்காட்சி
குறித்து 'இன்னோவேட்டிவ் பிஸினஸ் பேர்' நிறுவன வணிக மேலாளர் மனோஜ்
கூறியதாவது:எங்கள் நிறுவனம் சார்பில் நடத்தப்படும் 17 வது கண்காட்சி இது.
இதில் 120 க்கும் மேற்பட்ட அரங்குள் உள்ளன. கட்டுமான துறை நிறுவனங்கள்,
கட்டடக்கலை வல்லுநர்கள் மற்றும் கட்டட பொருட்கள் விற்பனையாளர்கள் என
பல்வேறு நிறுவனங்கள், இங்கு அரங்குகளை அமைத்துள்ளன. புதிதாக வீடு கட்ட
விரும்பும் வாடிக்கையாளர்கள் இந்த கண்காட்சிக்கு வந்தால், வீடு கட்ட என்ன
மாதிரியான பொருட்கள் தேவை மற்றும் அதன் விலை விபரம் என்ன? இடத்தின் விலை
என்ன என்பது பற்றி அறிந்து கொள்ள வாய்ப்பாக அமையும். வீடு கட்டிக் கொண்டு
இருப்பவர்களுக்கு தங்களின் புதிய வீட்டுக்கு தேவையான பர்னிச்சர்கள் மற்றும்
கிச்சன் பொருட்களை வாங்க வசதியாக அனைத்துப் பொருட்களும் இங்கு உள்ளன.
கடந்த ஆண்டு நடந்த கண்காட்சியில் 4000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த ஆண்டு இன்னும் அதிகமானோர் வருவார்கள் என எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு,
மனோஜ் கூறினார். காலை 10.30 முதல் இரவு 8.30 மணி வரை நடக்கும்
இக்கண்காட்சி, நாளையுடன் நிறைவடைகிறது.