Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/நிர்வாணமாக சுற்றும் மனநலம் பாதித்த பெண்

நிர்வாணமாக சுற்றும் மனநலம் பாதித்த பெண்

நிர்வாணமாக சுற்றும் மனநலம் பாதித்த பெண்

நிர்வாணமாக சுற்றும் மனநலம் பாதித்த பெண்

ADDED : ஆக 09, 2011 01:06 AM


Google News

ராமநாதபுரம் : ராமநாதபுரம் பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன் மனநலம் பாதித்த 50 வயது மதிக்கத்தக்க பெண் நிர்வாணமாக நடந்து செல்வதும், பின் கழிவுநீர் கால்வாயில் அமர்வதுமாக இருக்கிறார்.

இதை கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள் பெண்ணிடம் துணியை கொடுத்தாலும் அதை தூக்கி வீசிவிட்டு மீண்டும் நிர்வாணமாகவே வலம் வந்தார். போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்பெண்ணை போலீசார், அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது, அவர்களிடமிருந்து தப்பினார். தற்போது மீண்டும் பஸ் ஸ்டாண்டை சுற்றி வருகிறார். இப்பெண்ணை மனநல காப்பகத்தில் சேர்க்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us