Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/பராமரிப்பின்றி அழியும் அரசு தோட்டம் : கமுதியில் பல லட்சம் பொருள் மாயம்

பராமரிப்பின்றி அழியும் அரசு தோட்டம் : கமுதியில் பல லட்சம் பொருள் மாயம்

பராமரிப்பின்றி அழியும் அரசு தோட்டம் : கமுதியில் பல லட்சம் பொருள் மாயம்

பராமரிப்பின்றி அழியும் அரசு தோட்டம் : கமுதியில் பல லட்சம் பொருள் மாயம்

ADDED : ஆக 09, 2011 01:06 AM


Google News

கமுதி : கமுதியில் தோட்டக்கலைத்துறை மெத்தனத்தால் தோட்டங்கள் அழிந்து வருகிறது.

கமுதியில் தோட்டக்கலை துறைக்கு போதிய இட வசதி, நல்ல தண்ணீர் வசதிகள் இருந்தும் பூ வகைகளான ஜெனியா, பால்சம், குரோட்டன்ஸ், ரோஜா, மற்றும் மா, கொய்யா உட்பட பல மரக்கன்றுகளை வளர்க்க ஊழியர்கள் போதிய முயற்சி மேற்கொள்ளவில்லை. பல லட்சம் மதிப்பீட்டில் மரக்கன்றுகள் வளர்க்க உதவும் கூடாரங்கள், பூந்தொட்டிகள் உட்பட உபகரணங்கள் சேதமடைந்துள்ளன. துறை அலுவலகத்தில் உள்ள உபகரணங்கள் மாயமாகி உள்ளன. அலுவலக கட்டடங்கள் சேதமடைந்தும், கன்றுகள் வளர்க்க குளிரூட்டப்பட்ட அமைப்புகள் இருந்தும், தற்போது கூடாரம் கால்நடைகள் அடைக்கும் இடமாகவும் உருமாறி வருகிறது. இதனால் பசுமை ஆர்வலர்கள் வேதனை அடைந்துள்ளனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us