/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பெண் போலீசை ஏமாற்றிய கணவன் மீது வழக்குபெண் போலீசை ஏமாற்றிய கணவன் மீது வழக்கு
பெண் போலீசை ஏமாற்றிய கணவன் மீது வழக்கு
பெண் போலீசை ஏமாற்றிய கணவன் மீது வழக்கு
பெண் போலீசை ஏமாற்றிய கணவன் மீது வழக்கு
ADDED : ஆக 05, 2011 01:25 AM
பொள்ளாச்சி : பொள்ளாச்சியை சேர்ந்த ஆயுதப்படை பெண் போலீசை ஏமாற்றிய கணவன்
மற்றும் அவரது குடும்பத்தார் மீது மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து
தேடி வருகின்றனர்.பொள்ளாச்சி அடுத்த குள்ளக்காபாளையத்தை சேர்ந்த
கோகிலா(29), கோவை ஆயுதப்படையில் பணியாற்றி வருகிறார். கோகிலாவும், மதுரை,
மேலூரை சேர்ந்த விஜயபாஸ்கரும்(31) காதலித்து, கடந்த 21.11.2007ல் பெற்றோரை
சம்மதிக்க வைத்து திருமணம் செய்து கொண்டனர்.இந்நிலையில் கோகிலா,
பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசில், கணவன் மீது புகார்
கொடுத்துள்ளார்.போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:பெண் போலீஸ் கோகிலாவை
திருமணம் செய்த விஜயபாஸ்கர் பைனான்ஸ் தொழில் செய்துள்ளார். மதுரையில் நிலம்
வாங்குவதற்கு பணம் தேவை என்று கூறி இரண்டு லட்சம் ரூபாயும், 10 பவுன்
நகையையும் கோகிலாவிடம் வாங்கி சென்றுள்ளார். ஆனால், நிலமும் வாங்கவில்லை,
பணத்தையும் திரும்பி கொடுக்கவில்லை.
இதனால் குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டு
கணவன் - மனைவி பிரிந்து வாழ்கின்றனர். அவர்களுக்கு மூன்று வயது பெண்
குழந்தை உள்ளது.இந்நிலையில், விஜயபாஸ்கர் உடுமலையை சேர்ந்த நந்திதா
பாக்கியலட்சுமி என்ற பெண்ணை இரண்டாவது திருமணம் செய்துள்ளார். முதல்
மனைவியிடம் விவாகரத்து பெறாமல், இரண்டாவது திருமணம் செய்துள்ளார். நகை,
பணத்தை வாங்கிக்கொண்டு திரும்ப கொடுக்காமல் மோசடி
செய்துள்ளார்.இதுதொடர்பாக, விஜயபாஸ்கர், அவரது அப்பா அய்யாவு (55), அம்மா
அன்னபூரணி(50), இரண்டாவது மனைவி நந்திதா பாக்கியலட்சுமி (26) ஆகியோர் மீது
வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திருநெல்வேலியில் வசிக்கும் விஜயபாஸ்கர்
தலைமறைவாக உள்ளதால், அவரை தேடி வருகிறோம் என்றனர்.