/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/கூடுதுறை பூங்காவில்பாழான விளையாட்டு கருவிகள்கூடுதுறை பூங்காவில்பாழான விளையாட்டு கருவிகள்
கூடுதுறை பூங்காவில்பாழான விளையாட்டு கருவிகள்
கூடுதுறை பூங்காவில்பாழான விளையாட்டு கருவிகள்
கூடுதுறை பூங்காவில்பாழான விளையாட்டு கருவிகள்
ADDED : ஆக 01, 2011 02:39 AM
ஈரோடு: பவானி கூடுதுறையில் பராமரிக்கப்படும் பூங்காவில் உள்ள விளையாட்டு
பொருட்கள் உடைந்திருப்பதால், சிறுவர்கள் ஏமாற்றமடைகின்றனர்.காசிக்கு
அடுத்தபடியாக மூன்று நதிகள் இணைவது, ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறையில்
தான்.
முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க, வெளி மாநிலங்களை சேர்ந்தவர்களும்
கூடுதுறைக்கு வருகின்றனர். ஆடி பண்டிகை, ஆடி அமாவாசை, ஆரூத்ராதரிசனம்
உள்ளிட்ட பண்டிகையின் போது கூடுதுறையில் பக்தர்கள் குவிவர்.கோவிலுக்கு
வரும் பக்தர்களும், குழந்தைகளும் ஓய்வெடுக்க கோவிலில் பூங்கா
அமைக்கப்பட்டது. ஊஞ்சல், சறுக்கு, சீஸா உள்ளிட்ட விளையாட்டு பொருட்கள்
இங்குள்ளன. பல மாதங்களுக்கு மேலாக, விளையாட்டு பொருட்கள் உடைந்திருப்பதால்,
சிறுவர்கள் விளையாட முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.கோவில்
நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்து, உடைந்த விளையாட்டு பொருட்களை பழுது
நீக்கி, சிறுவர்கள் பயன்பாட்டுக்கு தர வேண்டும்.