/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/தூத்துக்குடி மாவட்டத்தில் குரூப் 2 டி.என்.பி.எஸ்.சி தேர்வு ஆர்வத்துடன் ஆண்கள், பெண்கள் பங்கேற்புதூத்துக்குடி மாவட்டத்தில் குரூப் 2 டி.என்.பி.எஸ்.சி தேர்வு ஆர்வத்துடன் ஆண்கள், பெண்கள் பங்கேற்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் குரூப் 2 டி.என்.பி.எஸ்.சி தேர்வு ஆர்வத்துடன் ஆண்கள், பெண்கள் பங்கேற்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் குரூப் 2 டி.என்.பி.எஸ்.சி தேர்வு ஆர்வத்துடன் ஆண்கள், பெண்கள் பங்கேற்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் குரூப் 2 டி.என்.பி.எஸ்.சி தேர்வு ஆர்வத்துடன் ஆண்கள், பெண்கள் பங்கேற்பு
ADDED : ஜூலை 31, 2011 01:01 AM
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் குரூப் 2 டி.என்.பி.எஸ்.சி
தேர்வு நேற்று நடந்தது.
ஆர்வத்துடன் ஆண், பெண்கள் தேர்வினை எழுதினர்.
தேர்வினை கண்காணிக்க சிறப்பு பறக்கும்படைகள் அமைக்கப்பட்டிருந்தன. அவர்கள்
தேர்வு மையங்களுக்கு திடீர், திடீரென சென்று சோதனை செய்தனர்.வணிகவரி உதவி
அலுவலர், வருவாய் உதவி அலுவலர், தலைமை செயலாக்க பிரிவு அலுவலர், நகராட்சி
கமிஷனர் உள்ளிட்ட மொத்தம் 6 ஆயிரத்து 695 பணியிடங்களுக்கு தமிழகம்
முழுவதும் டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்வு நேற்று நடந்தது. மாநிலம்
முழுவதும் சுமார் 4 லட்சத்து 80 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர்.தூத்துக்குடி
மாவட்டத்தில் தூத்துக்குடியில் 19 மையங்களில் 6 ஆயிரத்து 231 பேரும்,
திருச்செந்தூரில் 6 மையங்களில் ஆயிரத்து 716 பேரும், ஸ்ரீவைகுண்டத்தில் 3
மையங்களில் 770 பேரும், கோவில்பட்டியில் 9 மையங்களில் 2 ஆயிரத்து 850
பேரும் குரூப் 2 தேர்வினை எழுதினர். மொத்தம் 37 மையங்களில் 11 ஆயிரத்து 567
பேர் ஆர்வமாக குரூப் 2 தேர்வினை எழுதினர். ஆண்களை விட பெண்கள் அதிக
ஆர்வமாக இந்த தேர்வினை எழுத வந்தனர். தேர்வு அறைக்குள் செல்வதற்கு சில
நிமிடங்களுக்கு முன்பு கூட அவர்கள் படித்து கொண்டிருந்தனர்.
தூத்துக்குடியில் தேர்வு நடந்த மையங்களை டி.ஆர்.ஓ அமிர்தஜோதி
பார்வையிட்டார்.


