Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/பன்னம்பாறையில் மனுநீதிநாள் முகாம்166 மனுக்கள் நிராகரிப்பு

பன்னம்பாறையில் மனுநீதிநாள் முகாம்166 மனுக்கள் நிராகரிப்பு

பன்னம்பாறையில் மனுநீதிநாள் முகாம்166 மனுக்கள் நிராகரிப்பு

பன்னம்பாறையில் மனுநீதிநாள் முகாம்166 மனுக்கள் நிராகரிப்பு

ADDED : ஜூலை 30, 2011 12:49 AM


Google News
சாத்தான்குளம்:பன்னம்பாறையில் நடந்த மனுநீதிநாளில் 207 மனுக்களில் 41 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது. 166 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது.

சாத்தான்குளம் தாலுகா பன்னம்பாறை ஊராட்சிய ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மனுநீதிநாள் முகாம் நடந்தது. பன்னம்பாறை பஞ்.,துணைத் தலைவர் பாக்கியநாதன் தலைமை வகித்தார். சாத்தான்குளம் தாசில்தார் கருப்பசாமி வரவேற்றார். திருச்செந்தூர் ஆர்.டி.ஓ.,பொற்கொடி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

207 மனுக்கள் பெறப்பட்டதில் 41 மனுக்கள் மட்டும் ஏற்றுக் கொள்ளப்பட்டு 166 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. இதில் சமூக பாதுகாப்புத் திட்டத்தில் உதவித் தொகை கேட்டு 124 மனுக்கள் பெறப்பட்டதில் 166 மனுக்கள் ஏற்கப்பட்டு 108 மனு தள்ளுபடி செய்யப்பட்டது. ஆறு நபர்களுக்கு பட்டாமாறுதலும், சமூக பாதுகாப்புத் திட்டத்தில் முதியோர், ஊனமுற்றோர், விதவை என ஏழு பேருக்கு மாதாந்திர உதவித் தொகை பெற உத்தரவு வழங்கப்பட்டது.மூன்று நபர்களுக்கு ரேசன்கார்டு வழங்கப்பட்டது. உதவி தொடக்கக்கல்வி அதிகாரி மீனாட்சி, டி.எஸ்.ஓ.நடராஜன், மண்டல துணை தாசில்தார் சூரியநாராயணன், ஆர்.ஐ.,செல்வபிரசாத், வருவாய் உதவியாளர்கள் சுவாமிநாதன், நீலமேகம், வி.ஏ.ஓ.,க்கள் ராமகிருஷ்ணன், முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.பள்ளி மாணவர்களின் வில்லிசை மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. ஆர்.டி.ஓ.,பொற்கொடி பள்ளி சத்துணவு கூடத்தை பார்வையிட்டார். சமூக பாதுகாப்புத் திட்டத் தாசில்தார் வள்ளிக்கண்ணு நன்றி கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us