Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/மாநகராட்சி ஜப்தி நோட்டீசை ரத்து செய்ய கோரிய மனுக்கள்ஐகோர்ட் கிளை தள்ளுபடி

மாநகராட்சி ஜப்தி நோட்டீசை ரத்து செய்ய கோரிய மனுக்கள்ஐகோர்ட் கிளை தள்ளுபடி

மாநகராட்சி ஜப்தி நோட்டீசை ரத்து செய்ய கோரிய மனுக்கள்ஐகோர்ட் கிளை தள்ளுபடி

மாநகராட்சி ஜப்தி நோட்டீசை ரத்து செய்ய கோரிய மனுக்கள்ஐகோர்ட் கிளை தள்ளுபடி

ADDED : ஜூலை 28, 2011 03:25 AM


Google News
மதுரை : சொத்து வரி செலுத்தாதது குறித்து மதுரை மாநகராட்சி அனுப்பிய ஜப்தி நோட்டீசை ரத்து செய்ய கோரிய ஆறு மனுக்களை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்தது.மதுரையை சேர்ந்த பூவியாபாரி முத்துராமலிங்கம் உட்பட ஆறு பேர் தாக்கல் செய்த ரிட் மனுக்களில், ''சொத்துவரி செலுத்தாததாக கூறி, மாநகராட்சி ஜப்தி நோட்டீஸ் னுப்பியுள்ளது.

அதை ரத்து செய்யவேண்டும்,'' என கோரினார்.மனு நீதிபதி பி.ஜோதிமணி முன் விசாரணைக்கு வந்தது. மனுக்களுக்கு ஆட்சேபம் தெரிவித்து மாநகராட்சி வக்கீல் ரவிசங்கர் வாதிடுகையில், ''ஜப்தி நோட்டீசை எதிர்த்து மேல்முறையீடு செய்ய, மாநகராட்சி சட்டத்தில் வழியுண்டு. அதை விடுத்து மனுதாரர்கள் நேரடியாக ஐகோர்ட் கிளையை அணுகியது ஏற்புடையதல்ல,'' என்றார். அதை ஏற்று மனுக்களை நீதிபதி தள்ளுபடி செய்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us