ADDED : ஜூலை 27, 2011 11:26 PM
திருக்கோவிலூர் : திருக்கோவிலூர் அடுத்த வடக்கு நெமிலியை சேர்ந்த துரைசாமி மகன் செல்வம்,38.
கடந்த 22ம் தேதி கூலி வேலைக்கு சென்று மதியம் வீடு திரும்பினார். வீட்டில் இருந்த அவரது தாய் ஆனந்தாயியை,55 திடீரென காணவில்லை. உறவினர்கள் வீடுகளில் தேடி பார்த்தும் கிடைக்க வில்லை.புகாரின் பேரில் திருக்கோவிலூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.