/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/நடுங்குது நண்டு விலை : மீனவர்கள் பாதிப்புநடுங்குது நண்டு விலை : மீனவர்கள் பாதிப்பு
நடுங்குது நண்டு விலை : மீனவர்கள் பாதிப்பு
நடுங்குது நண்டு விலை : மீனவர்கள் பாதிப்பு
நடுங்குது நண்டு விலை : மீனவர்கள் பாதிப்பு
ADDED : ஜூலை 27, 2011 10:08 PM
மண்டபம் : ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் உயிர் நண்டு விலை கிலோவுக்கு 100 ரூபாய் குறைந்துள்ளது.
கடலில் பிடிக்கப்படும் உயிர் நண்டுகளின் சதைக்கு வெளிநாடுகளில் கிராக்கி உள்ளது.
கடந்த வாரம், ஏற்றுமதி கம்பெனிகள் உயிர்நண்டை கிலோவுக்கு 320 ரூபாய் வரை கொள்முதல் செய்தன. தற்போது நண்டு வரத்து குறைந்து, இதன் கொள்முதல் விலை கிலோவுக்கு 220 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மண்டபம், தேசிய மீனவ சங்கத்தலைவர் பாலசுப்பிரமணியன் கூறியதாவது: நண்டு விலை 220 முதல் 260 என ஊசலாடுகிறது. எல்லா பொருட்களுக்கும் விலை ஏற்றம் உள்ள நிலையில் கடலில் பிடிக்கப்படும் இறால், நண்டு, கணவாய் என கடல்வாழ் உயிரினங்களுக்கு மட்டும் விலை ஏற்றம் இல்லை. தற்போதைய பொருளாதாரத்திற்கு ஏற்ற விலையை நிர்ணயிக்க மீன்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.