/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/காகுப்பத்தை ஒரே வார்டாக இணைக்க கோரிக்கைகாகுப்பத்தை ஒரே வார்டாக இணைக்க கோரிக்கை
காகுப்பத்தை ஒரே வார்டாக இணைக்க கோரிக்கை
காகுப்பத்தை ஒரே வார்டாக இணைக்க கோரிக்கை
காகுப்பத்தை ஒரே வார்டாக இணைக்க கோரிக்கை
ADDED : ஜூலை 27, 2011 12:38 AM
விழுப்புரம் : காகுப்பம் ஊராட்சிப் பகுதியை விழுப்புரம் நகராட்சியின் ஒரே வார்டு பகுதியாக இணைக்க வேண்டுமென பா.ம.க., ஒன்றிய செயலாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து காகுப்பம் ஊராட்சியைச் சேர்ந்த பா.ம.க., ஒன்றிய செயலாளர் சம்பத் மற்றும் அப்பகுதி மக்கள் விழுப்புரம் நகராட்சி அலுவலகத்தில் அளித்துள்ள கோரிக்கை மனுவில், கோலியனூர் ஒன்றியம் காகுப்பம் ஊராட்சியில் உள்ள ஒன்பது வார்டுகளை விழுப்புரம் நகராட்சியுடன் இணைக்க உள்ளனர். ஒன்று முதல் 7 வரை உள்ள கிராம வார்டுகளை 36வது நகராட்சி வார்டாக இணைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதேபோல் 8,9வது வார்டுகளை, எருமணந்தாங்கல் ஊராட்சியுடன் இணைக்க உள்ளனர். எங்கள் கிராமத்தில் உள்ள 2,150 வாக்காளர்களையும் உள்ளடக்கி ஒரே நகராட்சி வார்டாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இந்த மனுவின் நகல்களை நகராட்சி நிர்வாகத்துறை அரசு முதன்மை செயலாளர், நகராட்சி நிர்வாக ஆணையர்கள், கலெக்டர் மற்றும் நகராட்சி ஆணையருக்கு அனுப்பப் பட்டுள்ளது.


