Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/சேர்மன் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

சேர்மன் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

சேர்மன் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

சேர்மன் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

ADDED : ஜூலை 27, 2011 12:35 AM


Google News

விழுப்புரம் : விக்கிரவாண்டி பேரூராட்சி சேர்மன் அர்ச்சுணன் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் அடுத்த விக்கிரவாண்டி பேரூராட்சி மன்ற சேர்மன் அர்ச்சுணன் கடந்த ஏப்.12ம் தேதி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் சிலரை ஏற்கனவே கைது செய்துள்ளனர். வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான வரதராஜூ,24 என்பவரை தேடி வந்தனர். இவரை கடந்த 24ம் தேதி இரவு விழுப்புரம் டி.எஸ்.பி., சேகர், விக்கிரவாண்டி சப்-இன்ஸ்பெக்டர் ராமையா உள்ளிட்ட போலீசார் கைது செய்தனர். இவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத் தனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us