ADDED : ஜூலை 25, 2011 11:57 PM
பொன்னேரி : மீஞ்சூர் அடுத்த, திருவெள்ளவாயல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பாலகிருஷ்ணன், 49, குமரேசன், 36.
இவர்களுக்கு சொந்தமான மூன்று ஆடுகள், இரு தினங்களுக்கு முன் திருடுபோனது. இது குறித்து, ஆடுகளை பறிகொடுத்த இருவரும், காட்டூர் போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் விசாரித்து, காட்டூர் காலனியைச் சேர்ந்த ராஜா, 28, மூர்த்தி, 29, அருண், 23, ஆகிய மூன்று பேரை கைது செய்து, ஆடுகளை மீட்டனர்.