Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/இன்ஜினியரிங் படிக்க ஏழை மாணவிக்கு உதவிக்கரம்: "தினமலர்' செய்தி எதிரொலி

இன்ஜினியரிங் படிக்க ஏழை மாணவிக்கு உதவிக்கரம்: "தினமலர்' செய்தி எதிரொலி

இன்ஜினியரிங் படிக்க ஏழை மாணவிக்கு உதவிக்கரம்: "தினமலர்' செய்தி எதிரொலி

இன்ஜினியரிங் படிக்க ஏழை மாணவிக்கு உதவிக்கரம்: "தினமலர்' செய்தி எதிரொலி

ADDED : ஜூலை 25, 2011 09:45 PM


Google News

பொள்ளாச்சி : சென்னை அண்ணா பல்கலையில், பொறியியல் படிப்பில் சேர இடம் கிடைத்தும் பண வசதி இல்லாமல் தவித்த பொள்ளாச்சி மாணவிக்கு 'தினமலர்' செய்தி எதிரொலியாக உதவி குவிந்து வருகிறது.

பொள்ளாச்சி அடுத்த ஆர். கோபாலபுரத்தை சேர்ந்த சின்னசாமி, இவரது மனைவி முத்துலட்சுமி ஆகிய இருவரும் கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்களின் மகள் லாவண்யா பிளஸ் 2 பொதுத்தேர்வில் 1,166 மதிப்பெண்ணும், பொறியியல் 'கட்-ஆப்' 195.25 பெற்றார். கவுன்சிலிங்கில் சென்னை அண்ணா பல்கலை கழகத்தில் 'ஜியோ இன்பர்மேட்டிக்' இன்ஜினியரிங் படிப்பில் சேர வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால், மாணவியின் பெற்றோரிடம் போதிய வசதியில்லாததால், கல்விக்கான கட்டணத்தை செலுத்த முடியாமல் திணறி வருகின்றனர். உயர்கல்வி தொடர, தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் உதவியை நாடும் முயற்சியில் மாணவி ஈடுபட்டுள்ளார். இது குறித்து கடந்த 20ம் தேதி 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, மாணவி கல்வியை தொடர பலரும் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். செய்தி வெளியானதும், பொள்ளாச்சியை சேர்ந்த வித்யா என்பவர் மாணவிக்கு ஐந்தாயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார். இதுதவிர, பொள்ளாச்சி ஐயப்பா சேவா சங்கம் சார்பில் மாணவிக்கு 15 ஆயிரத்து 120 ரூபாய் வழங்கப்பட்டது. இதற்கான டி.டி.,யை பொள்ளாச்சி ஐயப்பன் கோவிலில், சேவா அணி நிர்வாகிகள் முருகன், தர்மராஜ், நீலகண்டன், கிருஷ்ணன், சரவணன் ஆகியோர் வழங்கினர். நிர்வாகிகள் கூறுகையில், 'மாணவிக்கு வரும் கல்வியாண்டிலும் நிதியுதவி வழங்க விண்ணப்பம் வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது' என்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us