ADDED : ஜூலை 24, 2011 10:36 PM
சிதம்பரம் : சிதம்பரம் மிட் டவுன் ரோட்டரி சங்க திட்ட செயல்பாடுகள் குறித்து நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.சங்கத் தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார்.
சாசனத் தலைவர் அம்பலவாணன் முன்னிலை வகித்தார். முன்னாள் தலைவர் கேசவன் வரவேற்றார். சுற்றுச்சூழல் இயக்குனர்கள் பேராசிரியர்கள் கதிரேசன், மோகன் ஆகியோர் சுற்றுச்சூழல் பாதுகாப்பது குறித்து பேசினர். முன்னாள் தலைவர் பாரி, கோவிந்தராஜன், செயலர் கமல்சந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.மாற்றுத்திறனாளி ஒருவருக்கு மூன்று சக்கர சைக்கிள் வழங்கப்பட்டது. தேசிய அளவிலான சுற்றுச்சூழல் விருது பெற்ற எடிசன் பள்ளி மாணவர் குரு விஷ்ணுவிற்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.சங்க பொருளாளர் செந்தில்குமார் நன்றி கூறினார்.


