UPDATED : ஜூலை 24, 2011 11:38 PM
ADDED : ஜூலை 24, 2011 06:42 PM
லார்ட்ஸ்: லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. 4ம் நாளான இன்று தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சில் 6 விக்கெட் இழப்பிற்கு 269 ரன்கள் எடுத்த.நிலையில் டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. ஆண்ட்ரு ஸ்டிராஸ் 32 ரன்களுக்கு ஹர்பஜன் சிங் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். குக் பிரவீண் குமார் பந்தில் 1 ரன்கள் எடு்த்து அவுட்டானார். ட்ராட் இஷாந்த் சர்மா பந்து வீச்சில் போல்டானார். முதல் இன்னிங்சில் இரட்டை சதமடித்த பீட்டர்சன் ஒரு ரன்னுக்கு இஷாந்த் சர்மா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இயான் பெல் ரன் எதுவும் எடுக்காமல் இஷாந்த் சர்மா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். மொர்கன் 19 ரன்களுக்கு இஷாந்த் சர்மா பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். மாட் பிரையர் சிறப்பாக விளையாடி 120 பந்துகளில் சதமடித்து களத்தில் இருந்தார். ஸ்டுவர்ட் போர்டு 74 ரன்களுடன் களத்தில் இருந்தார்.இதன் மூலம் இந்திய அணி வெற்றி பெற இலக்காக 458 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து 2வது இன்னிங்ஸ் ஆடதுவங்கிய இந்திய அணி 1விக்கெட் இழப்பிற்கு 80 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 4ம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இதனால் இந்தியா கடைசி நாள் ஆட்டத்தில் 378 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை உள்ளதால் ஆட்டம் டிராவை நோக்கி செல்லாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 474 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 286 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது குறிப்பிடத்தக்கது