/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/தேசிய முகாம் வித்யா மந்திர் கல்லூரி மாணவர் பங்கேற்புதேசிய முகாம் வித்யா மந்திர் கல்லூரி மாணவர் பங்கேற்பு
தேசிய முகாம் வித்யா மந்திர் கல்லூரி மாணவர் பங்கேற்பு
தேசிய முகாம் வித்யா மந்திர் கல்லூரி மாணவர் பங்கேற்பு
தேசிய முகாம் வித்யா மந்திர் கல்லூரி மாணவர் பங்கேற்பு
ADDED : ஜூலை 22, 2011 11:28 PM
ஊத்தஙகரை: ஊத்தங்கரை ஸ்ரீவித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி என்.எஸ்.எஸ்., மாணவன் கார்த்திகேயன் தேசிய முகாமில் பங்கேற்றார்.
இமாச்சல பிரதேசம் சிம்லாவில் தேசிய அளவில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த என்.எஸ்.எஸ்., மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இம்முகாமில் ஊத்தங்கரை ஸ்ரீவித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவன் கார்த்திகேயன் பங்கேற்றார். முகாமில் மலையேற்ற பயிற்சி, பனிமலையேற்ற பயிற்சி, மலைவாழ் மக்களின் வாழ்வியல் முறை மற்றும் கருத்தரங்குகள் நடந்தன. முகாமில் பங்கேற்று திரும்பிய மாணவன் கார்த்திகேயனை கல்லூரி செயலாளர் செங்கோடன், கல்லூரி முதல்வர் அருள், பி.ஆர்.ஓ., தர்மலிங்கம், என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர்கள் கோவிந்தராஜ், செந்தில்நாதன், பார்த்திபன், கல்பனா தேவி மற்றும் ஆசிரியர்கள், பேராசிரியர்கள் வரவேற்று பாராட்டினர்.