Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ராணுவத்தில் சேவையாற்ற வாருங்கள்: என்.சி.சி., மாணவர்களுக்கு அழைப்பு

ராணுவத்தில் சேவையாற்ற வாருங்கள்: என்.சி.சி., மாணவர்களுக்கு அழைப்பு

ராணுவத்தில் சேவையாற்ற வாருங்கள்: என்.சி.சி., மாணவர்களுக்கு அழைப்பு

ராணுவத்தில் சேவையாற்ற வாருங்கள்: என்.சி.சி., மாணவர்களுக்கு அழைப்பு

ADDED : ஜூலை 21, 2011 12:24 AM


Google News

கோவை : 'என்.சி.சி., மாணவர்கள் ராணுவத்தில் சேவையாற்ற முன்வர வேண்டும்.

போர் நடக்குமிடத்துக்கு சென்று சண்டையிட வேண்டிய அவசியமில்லை; நிர்வாகப்பிரிவில் உள்ள பல பதவியிடங்களில் திறமையை வெளிப்படுத்தலாம்' என, பல்கலை விழாவில் மாநில என்.சி.சி., தலைமையக டெபுடி டைரக்டர் ஜெனரல் வலியுறுத்தினார். என்.சி.சி.,யில் சிறந்த செயல்பாட்டுக்காக கோவை, அவினாசிலிங்கம் பல்கலை துணைவேந்தர் ஷீலாவுக்கு 'என்.சி.சி., கர்னல்' கவுரவ விருது வழங்கும் விழா நடந்தது. பல்கலை வேந்தர் மீனாட்சிசுந்தரம் தலைமை வகித்தார். தமிழ்நாடு என்.சி.சி., தலைமையக டெபுடி டைரக்டர் ஜெனரல் கமாடர் சார்தஜ் இமாம் தலைமை வகித்து, துணைவேந்தருக்கு விருது வழங்கி பேசியதாவது:பல்கலை துணைவேந்தர் என்.சி.சி., செயல்பாடுகளில் அதிக ஈடுபாடு கொண்டதால், இவ்விருது வழங்கப்படுகிறது. எந்த பயிற்சி முகாம் நடந்தாலும் பெயரளவில் மட்டுமின்றி முழுமனதுடன் மாணவர்கள் ஈடுபட வேண்டும். தற்போது தேசம் முழுவதுமுள்ள என்.சி.சி., மாணவர்களின் எண்ணிக்கை 13 லட்சம். அதில், தமிழகத்தில் மட்டும் ஒரு லட்சத்து ஆயிரத்து 650 மாணவர்கள் உள்ளனர்; 4,180 பள்ளி, கல்லூரி மாணவர்கள் அடங்குவர். மாணவர்கள் படிக்கும்போது மட்டுமே என்.சி.சி.,யில் சேவை புரிந்தாலும், பின்னர் தொடருவதில்லை. போர் வீரருக்கு உரிய பல்வேறு பயிற்சிகள் இவர்களுக்கு அளிக்கப்படுகின்றன. எனவே, என்.சி.சி., மாணவர்கள் அனைவருமே படிப்பை முடித்தவுடன் ராணுவத்தில் சேவையாற்ற முன்வர வேண்டும். ராணுவத்தில் ஏராளமான வேலை வாய்ப்புகள் உள்ளன. ராணுவ வீரர்கள் அனைவருமே போர் நடக்குமிடத்துக்கு சென்று சண்டையிட வேண்டிய அவசியமில்லை; நிர்வாகப்பிரிவில் உள்ள பல பதவிகளில் திறமையை வெளிப்படுத்தி சேவை புரியலாம். இதுதவிர கப்பல் மற்றும் விமானப்படையிலும் வாய்ப்புகள் உள்ளதால், சரிவர பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு, கமாடர் சார்தஜ் இமாம் பேசினார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us