ADDED : ஜூலை 16, 2011 01:09 AM
சேலம்: மாவட்ட கலெக்டர் மகரபூஷணம் வெளியிட்டுள்ள அறிக்கை: மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக சேவை புரிந்தவர்களுக்கு, ஆக.,15ம் தேதி சுதந்திர தினத்தன்று, தமிழக முதல்வரால், விருதுகள் வழங்கப்பட உள்ளது.
சிறந்த தனியார் தொழில் நிறுவனர் (அதிக அளவில் மாற்றுத் திறனாளிகளை பணியில் அமர்த்தியதற்கு) விருது, சிறந்த தன்னார்வ தொண்டு நிறுவனத்துக்கான விருது(மாற்று திறனாளிகளின் நலுக்காக சேவை புரிந்ததற்கு) சிறந்த மருத்துவருக்கான விருது (மாற்று திறனாளிகளுக்கு அதிக அளவில் மருத்துவ சேவை புரிந்ததற்கு) சிறந்த சமூக பணியாளருக்கான விருது(மாற்றுத் திறனாளி) வழங்கப்பட உள்ளது. இவ்விருதை பெறுவதற்கு, ஜூலை 19ம் தேதிக்குள், மாவட்ட மாற்று திறனாளிகள் நல அலுவலர், அறை எண் 11, தரைத்தளம், மாவட்ட கலெக்டர் அலுவலகம், சேலம்-1 என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். மேலும், விபரங்களுக்கு, 0427-2415242 என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.