/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ரேஷன் அரிசி வாங்குவோர் 18 சதவீதம் அதிகரிப்புரேஷன் அரிசி வாங்குவோர் 18 சதவீதம் அதிகரிப்பு
ரேஷன் அரிசி வாங்குவோர் 18 சதவீதம் அதிகரிப்பு
ரேஷன் அரிசி வாங்குவோர் 18 சதவீதம் அதிகரிப்பு
ரேஷன் அரிசி வாங்குவோர் 18 சதவீதம் அதிகரிப்பு
ADDED : ஜூலை 15, 2011 12:38 AM
ஈரோடு: அரசின் இலவச அரிசியால் ஈரோடு மாவட்டத்தில் ரேஷன்கடைகளில் அரிசி வாங்குவோரின் எண்ணிக்கை 18 சதவீதம் அதிகரித்தது.
ஈரோடு மாவட்டத்தில், மண்டல கூட்டுறவுத் துறை மூலம் 998 ரேஷன் கடைகள், நுகர்பொருள் வாணிப கழகத்தின் கீழ் 14, மகளிர் சுயஉதவிக்குழுக்களின் மூலம் 28 உள்பட 1,030 ரேஷன்கடைகள் செயல்படுகின்றன.
தி.மு.க., ஆட்சியில் பொதுவினியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடையில் வழங்கிய அரிசியின் தரம் குறைவாக இருந்தது. ஈரோடு மாவட்டத்துக்கான மாதாந்திர அரிசி ஒதுக்கீட்டில், 70 சதவீதம் மட்டுமே வினியோகம் செய்யப்பட்டது. இவை பெரும்பாலும் கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் ரேஷன்கடைகள் மூலம் வினியோகம் செய்யப்பட்டது. அ.தி.மு.க., ஆட்சியமைத்த பின், ஜூன் முதல் அரசின் இலவச அரிசி வினியோகம் கடந்த ஜூன் மாதம் முதல் தேதி துவங்கியது. சாதாரண ரேஷன்கார்டுக்கு 20 கிலோ அரிசியும், அந்தியோதய திட்ட ரேஷன்கார்டுகளுக்கு 35 கிலோ அரிசியும் வழங்கப்படுகிறது. இலவசமாக தரமான அரிசி வழங்கப்படுவதால், அதை வாங்குவதில் மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் ஈரோடு மாவட்டத்துக்கான அரிசி ஒதுக்கீடு 11 ஆயிரம் மெட்ரிக் டன்னாக உயர்ந்தது. மாவட்டத்தில் ரேஷன் அரிசி வாங்குவோரின் எண்ணிக்கை 18 சதவீதம் உயர்ந்து 88 சதவீதமானது. இலவச அரிசி தொடர்ந்து தரம் குறையாமல் வினியோகித்தால், வாங்குவோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. ரேஷன்கடைகளில் முறைகள் நடப்பதை தடுக்க தொடர்ந்து கண்காணிப்பு பணியும் மேற்கொள்ள வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.