/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ஒரே மாதத்தில் கொப்பரை கிலோவுக்கு ரூ.20 சரிவுஒரே மாதத்தில் கொப்பரை கிலோவுக்கு ரூ.20 சரிவு
ஒரே மாதத்தில் கொப்பரை கிலோவுக்கு ரூ.20 சரிவு
ஒரே மாதத்தில் கொப்பரை கிலோவுக்கு ரூ.20 சரிவு
ஒரே மாதத்தில் கொப்பரை கிலோவுக்கு ரூ.20 சரிவு
ADDED : ஜூலை 11, 2011 09:52 PM
பொள்ளாச்சி : தேங்காய் எண்ணெயில் பார்ம்கர்னல் எண்ணெயை கலப்படம் செய்வதால்
வெளிமார்க்கெட்டில் கொப்பரை விலை சரிந்துள்ளதால் தேங்காயை இருப்பு வைக்க
துவங்கியுள்ளனர். காங்கேயம் மார்க்கெட்டில் கடந்த 2ம் தேதி நிலவரப்படி,
கொப்பரை கிலோவுக்கு 55 -57 ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. தேங்காய்
எண்ணெய் 15 கிலோ டின்னுக்கு 1,200 ரூபாயும், தேங்காய் பவுடர் கிலோவுக்கு 83
ரூபாயும் விலை கிடைத்தது.
பொள்ளாச்சி, உடுமலை பகுதியில் இருந்து சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு
அனுப்பும் உரித்த தேங்காய் டன்னுக்கு 15,500 ரூபாய் விலை கொடுக்கப்பட்டது.
விவசாயிகள் சொந்த பொறுப்பில் பறித்து உரித்த தேங்காய் டன்னுக்கு 16,000 -
16,500 ரூபாய் விலை கிடைத்தது. தென்னந்தோப்புகளில் விவசாயிகள் பறித்து
இருப்பு வைத்திருக்கும் தேங்காய் ஒன்றுக்கு 9.00 - 9.25 ரூபாயும்,
வியாபாரிகள் பறித்துக்கொள்வதற்கு ஒரு தேங்காய்க்கு 7.50 - 8.50 ரூபாயும்
விலை கிடைத்தது. நேற்றைய நிலவரப்படி, கொப்பரை கிலோவுக்கு 49 - 52 ரூபாய்
விலை கிடைத்தது. தேங்காய் எண்ணெய் 15 கிலோ டின்னுக்கு 1,100 ரூபாய் முதல்
1,150 ரூபாய் வரையிலும், தேங்காய் பவுடர் கிலோவுக்கு 75 ரூபாயும் விலை
நிர்ணயம் செய்யப்பட்டது. விவசாயிகள் பறித்து உரித்து வைத்திருக்கும்
தேங்காய் டன்னுக்கு 13,000 - 14,000 ரூபாய் விலை கிடைத்தது. பொள்ளாச்சி,
உடுமலை பகுதிகளில் இருந்து சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு உணவு தேவைக்காக
அனுப்பப்படும் தேங்காய் டன்னுக்கு 12,500 ரூபாய் விலை கிடைத்தது.
தென்னந்தோப்புகளில் விவசாயிகள் பறித்து இருப்பு வைத்துள்ள தேங்காய்
ஒன்றுக்கு 7.00 ரூபாயும், வியாபாரிகள் பறித்துக்கொள்வதற்கு ஒரு
தேங்காய்க்கு 6.00 ரூபாயும் விலை கிடைத்தது.
கொப்பரை உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: கடந்த வாரத்துடன்
ஒப்பிடும் போது கொப்பரை கிலோவுக்கு 6.00 ரூபாயும், தேங்காய் எண்ணெய்
டின்னுக்கு 100 ரூபாயும் விலை சரிந்துள்ளது. கடந்த மாத நிலவரத்துடன்
ஒப்பிடும் போது, கொப்பரை கிலோவுக்கு 20 ரூபாய் விலை சரிந்துள்ளது.
தோப்புகளில் ஒரு தேங்காய் கொள்முதல் விலை நான்கு ரூபாய் சரிந்துள்ளது.
இதனால், ஒட்டுமொத்த தேங்காய் சார்ந்த பொருட்களின் வர்த்தகமும் முடங்கி
விட்டது. திடீர் விலைச்சரிவு ஏற்பட்டுள்ளதால், தென்னை விவசாயிகள் தேங்காயை
இருப்பு வைக்க துவங்கியுள்ளனர். தேங்காய் வியாபாரிகளும் இருப்பு
வைத்துள்ளனர். கடந்த மூன்று நாட்களாக தேங்காய், கொப்பரை வர்த்தகம்
முழுமையாக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி
செய்யப்படும் பார்ம்கர்னல் எண்ணெயை தேங்காய் எண்ணையில் கலப்படம் செய்வதை
தமிழக அரசு தடுக்காவிட்டால், தேங்காய் சார்ந்த பொருட்களின் விலை மேலும்
சரிந்து விடும் என்றனர்.ஆனைமலை: ஆனைமலை சுற்றுப்பகுதி விவசாயிகள் 35 பேர்
48 மூட்டை கொப்பரையை ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு கொண்டு
வந்தனர். கொப்பரையை நான்கு வியாபாரிகள் ஏலம் எடுத்தனர். விற்பனைக்கூட
கண்காணிப்பாளர் (பொறுப்பு) தமிழ்ச்செல்வன் ஏலம் நடத்தினார்.முதல் தர
கொப்பரை 29 மூட்டை ஏலம் விடப்பட்டதில், கிலோவுக்கு குறைந்தபட்சமாக 46.05
ரூபாய் முதல் அதிகபட்சமாக 47.50 ரூபாய் வரை விலை கிடைத்தது. இரண்டாம் தர
கொப்பரை 19 மூட்டை ஏலம் விடப்பட்டதில், கிலோவுக்கு குறைந்தபட்சமாக 32.00
ரூபாய் முதல் அதிகபட்சமாக 45.05 ரூபாய் வரை விலை கிடைத்தது. அதிகாரிகள்
கூறுகையில், முதல் தரகொப்பரை விலை கிலோவுக்கு 1 ரூபாய் குறைந்துள்ளது.
மழையின் காரணமாக கொப்பரை ஈரப்பதமாக இருந்ததால் விலை சரிந்துள்ளது என்றனர்.