ADDED : ஜூலை 20, 2011 05:35 AM
திண்டுக்கல்:திண்டுக்கல் டாக்டர் பாஸ்கரன் கொலை வழக்கில், மூன்று முக்கிய சாட்சிகள் விசாரணை நேற்று நடந்தது.
இவர் கடந்த 2009 ல் கடத்தி கொல்லப்பட்டார். இவ்வழக்கில் கார்த்திகேயன், நண்பர்கள் சபீர், உமர், துரைப்பாண்டி, ராஜ்குமார், முகிலன், விவேக், சங்கர், மஞ்சுபார்கவி மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. வழக்கு விசாரணை நேற்று விரைவு கோர்ட்டில் நடந்தது. இதில், குற்றம்சாட்டப்பட்டவர்கள் ஆஜராயினர். பிரேத பரிசோதனை செய்த ஆனைமலை டாக்டர் முருகபூபதி, மதுரை போட்டோகிராபர் தேவதாஸ்குப்தா, சிம் கார்டு விற்பனையாளர் நாராயணன் சாட்சியம் அளித்தனர். விசாரணையை ஆக., 1 க்கு நீதிபதி முருகாம்பாள் தள்ளிவைத்தார்.