/உள்ளூர் செய்திகள்/கடலூர்/உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட அ.தி.மு.க.,வில் விருப்ப மனுஉள்ளாட்சி தேர்தலில் போட்டியிட அ.தி.மு.க.,வில் விருப்ப மனு
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட அ.தி.மு.க.,வில் விருப்ப மனு
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட அ.தி.மு.க.,வில் விருப்ப மனு
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட அ.தி.மு.க.,வில் விருப்ப மனு
ADDED : செப் 03, 2011 01:41 AM
கடலூர் : கடலூர் மாவட்டத்தில் அ.தி.மு.க., சார்பில் உள்ளாட்சி அமைப்பு தேர்தலில் போட்டியிட ஏராளமானோர் விருப்ப மனு கொடுத்தனர்.கடலூர் கிழக்கு மாவட்டத்தில் அ.தி.
மு.க., சார்பில் உள்ளாட்சி அமைப்பு தேர்தலில் போட்டியிட விருப்ப மனு பெறும் நிகழ்ச்சியில் அமைச்சர் சம்பத் முன்னாள் எம்.எல்.ஏ., அய்யப்பன் உட்பட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர். அதில் கடலூர், நெல்லிக்குப்பம், பண்ருட்டி, விருத்தாசலம் ஆகிய நகராட்சியில் தலைவர் மற்றும் உறுப்பினர் பதவி, அண்ணாகிராமம், பண்ருட்டி, விருத்தாசலம், கடலூர், நல்லூர் ஒன்றியங்களில் உறுப்பினர் பதவி, மேல்பட்டாம்பாக்கம், துரைப்பாடி, வடலூர், குறிஞ்சிப்பாடி, கங்கைகொண்டான் பேரூராட்சிகளில் தலைவர், உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிட விருப்பம் தெரிவித்து ஏராளமானோர் விருப்ப மனு கொடுத்தனர்.சிதம்பரம்: மேற்கு மாவட்டச் செயலர் அருண்மொழித்தேவன் தலைமையில் கீழ வீதி கட்சி அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் நகர செயலர் சுந்தர், முன்னாள் எம்.எல்.ஏ., அருள், முன்னாள் நகர மன்ற தலைவர் குமார், இளைஞரணி ஜவகர், மகளிரணி தேன்மொழி காத்தவராயசாமி, கவுன்சிலர் சிவராம தீட்சிதர் பங்கேற்றனர்.சிதம்பரம் நகராட்சி, பரங்கிப்பேட்டை ஒன்றியம், பேரூராட்சி, கிள்ளை, அண்ணாமலைநகர் பேரூராட்சி ஆகிய பகுதிகளில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் மனுக்களை பெற்றுச் சென்றனர்.காட்டுமன்னார்கோவிலில் முருகுமாறன் எம்.எல்.ஏ., ஒன்றிய செயலர் துரை பாண்டியன், குமராட்சி ஒன்றிய செயலர் பாண்டியன், பேரூராட்சி உறுப்பினர் எம்.ஜி.ஆர். தாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இதில் நகராட்சி சேர்மன் பதவிக்கு 5000 ரூபாயும், கவுன்சிலர் பதவிக்கும் 2,000, பேரூராட்சி தலைவர் பதவிக்கு 2500, கவுன்சிலர் பதவிக்கு 500, மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிக்கு 5,000, ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 2,000 ரூபாயும் விருப்ப மனுக்களுக்கு கட்டணமாக பெறப்பட்டன.