/உள்ளூர் செய்திகள்/கடலூர்/மனைப் பிரிவிற்கு அங்கீகாரம் பெற நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவுமனைப் பிரிவிற்கு அங்கீகாரம் பெற நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு
மனைப் பிரிவிற்கு அங்கீகாரம் பெற நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு
மனைப் பிரிவிற்கு அங்கீகாரம் பெற நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு
மனைப் பிரிவிற்கு அங்கீகாரம் பெற நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு
ADDED : ஆக 30, 2011 10:44 PM
நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் அந்தோணிபிள்ளை நகர் நலச்சங்க நிர்வாகிகள் தேர்வு நடந்தது.
நெல்லிக்குப்பம் இ.ஐ.டி., பாரி சர்க்கரை ஆலையில் பணியாற்றிய சிப்பந்திகள், தொழிலாளிகள் பங்களிப்பில் கடந்த 1992ம் ஆண்டு வீட்டு மனைகள் வழங்கப்பட்டது. 18 ஆண்டுக்குப் பின் 6 மாதங்களுக்கு முன் அளந்து பிரித்து வழங்கினர். நகராட்சி அனுமதி பெறாமல் மனைப்பிரிவு அமைத்ததால் கட்டடம் கட்ட அனுமதி மற்றும் அடிப்படை வசதிகள் பெறவும் இயலவில்லை. நலச்சங்கம் துவக்கி அடிப்படை வசதி பெற முடிவு செய்தனர். அதன்படி நடந்த நலச்சங்கக் கூட்டத்தில் தலைவராக தனசேகரன், துணைத் தலைவராக நாராயணன், செயலராக பழனிச்சாமி, துணைச் செயலராக கமலக்கண்ணன், பொருளாளராக சரபுதீன், ஆலோசகர்களாக வரதராஜன், பிச்சைமுத்து தேர்வு செய்யப்பட்டனர். கூட்டத்தில் விரைவில் நகராட்சி அங்கீகாரம் பெற நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


