ADDED : ஆக 03, 2011 12:09 AM
கோவில்பட்டி : கோவில்பட்டியில் டிராக்டரும், வேனும் மோதிய விபத்தில் இருவர் காயமடைந்தனர்.
இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது, கோவில்பட்டி அருகேயுள்ள வள்ளிநாயகபுரம் மேலத்தெருவை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் மாரிமுத்து(35). டிராக்டர் டிரைவரான இவர் கோவில்பட்டி ஒர்க்ஷாப்பில் டிராக்டர் வேலைகளை முடித்துக் கொண்டு ஊருக்குச் செல்ல புதுரோடு வழியாக டிராக்டரில் சென்று கொண்டிருந்ததாக தெரிகிறது. அப்போது எதிரே வந்த வேன் டிராக்டருடன் மோதியதில் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் டிராக்டர் டிரைவர் மாரிமுத்து, வேன் டிரைவரான வடக்கு திட்டங்குளம் ராமையா மகன் மாரியப்பன்(32) ஆகிய இருவரும் காயமடைந்தனர். சம்பவம் குறித்து தகவலறிந்த கோவில்பட்டி கிழக்கு போலீசார் காயமடைந்த இருவரையும் மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து டிராக்டர் டிரைவர் மாரிமுத்து கிழக்கு போலீசில் புகார் செய்தார். இதையடுத்து கிழக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துசாமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.