Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/பணி நீக்க காலத்தை பணி காலமாக அறிவிக்க கோரிக்கை

பணி நீக்க காலத்தை பணி காலமாக அறிவிக்க கோரிக்கை

பணி நீக்க காலத்தை பணி காலமாக அறிவிக்க கோரிக்கை

பணி நீக்க காலத்தை பணி காலமாக அறிவிக்க கோரிக்கை

ADDED : ஜூலை 11, 2011 09:39 PM


Google News
திருப்பூர் : 'பணி நீக்க காலத்தை பணி காலமாக அறிவிக்க வேண்டும்,' என, திருப்பூரில் நடந்த சாலை பணியாளர் சங்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டம், திருப்பூரில் நடந்தது; மாவட்ட அமைப்பாளர் சுப்ரமணி தலைமை வகித்தார். துணை அமைப்பாளர் அம்மாசை வரவேற்றார். மாநில தலைவர் சண்முகராஜா, பொது செயலாளர் வெங்கிடு பேசினர். கூட்டத்தில், 'புதிய அரசை பாராட்டும் வகையில், செப்., 7ல் சென்னையில் நடக்கும் பேரணியில் திரளாக பங்கேற்பது; 41 மாத பணி நீக்க காலத்தை, பணி காலமாக அறிவிக்க வலியுறுத்துதல்; வேலை நீக்க காலத்தில் கூட்டுறவு கடனுக்கு போடப்பட்ட வட்டி, அபராத வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும்; இறந்த சாலை பணியாளர் குடும்பங்களுக்கு வாரிசு வேலை வழங்குவதில், விடுபட்ட குடும்பங்களுக்கு வேலை வழங்க வேண்டும்,' என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட நிதி காப்பாளர் கோபால் நன்றி கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us