/உள்ளூர் செய்திகள்/தேனி/ஓட்டுப்பதிவு இயந்திரங்களை எடுத்துவர விமானத்தில் பறக்கும் அரசு அலுவலர்கள்ஓட்டுப்பதிவு இயந்திரங்களை எடுத்துவர விமானத்தில் பறக்கும் அரசு அலுவலர்கள்
ஓட்டுப்பதிவு இயந்திரங்களை எடுத்துவர விமானத்தில் பறக்கும் அரசு அலுவலர்கள்
ஓட்டுப்பதிவு இயந்திரங்களை எடுத்துவர விமானத்தில் பறக்கும் அரசு அலுவலர்கள்
ஓட்டுப்பதிவு இயந்திரங்களை எடுத்துவர விமானத்தில் பறக்கும் அரசு அலுவலர்கள்
ADDED : ஜன 05, 2011 10:33 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : ஓட்டுப்பதிவு இயந்திரங்களை உத்திரபிரதேசம் மாநிலத்தில் இருந்து எடுத்து வருவதற்காக மாவட்டத்திற்கு இரண்டு அல்லது மூன்று அலுவலர்கள் விமானத்தில் இன்று புறப்பட்டு செல்கின்றனர்.
தமிழக சட்டசபை தேர்தலில் பழைய ஓட்டுப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்தக்கூடாது என தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. உத்திரபிரதேச மாநில சட்டசபை தேர்தலில் சமீபத்தில் பயன்படுத்தப்பட்ட ஓட்டுப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இவற்றை எடுத்து வர ஜனவரி 6 ல் அங்கு இருக்குமாறு அந்தந்த மாவட்ட தேர்தல் அலுவலர்கள் ஆட்களை அனுப்பி வைக்கவேண்டும் என உத்தரவில் கூறப்பட்டுள்ளது. உ.பி.,யில் பயன்படுத்தப்பட்ட 78 ஆயிரம் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், 59 ஆயிரம் கன்ட்ரோல் யூனிட்டுகள் கொண்டுவரப்பட உள்ளன. இவற்றை கொண்டு வர 14 லட்சத்து 17 ஆயிரம் ரூபாய் செலவு அனுமதிக்கப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்டங்களில் உள்ள ஆர்.டி.ஓ., அந்தஸ்தில் உள்ள இருவர், உதவியாளர் ஒருவர் என மாவட்டத்திற்கு மூன்று பேர் வரை இன்று காலை புறப்பட்டு செல்கின்றனர். இன்று உ.பி.,யில் இருக்க வேண்டும் என்பதால் அனைவரும் விமானத்தில் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஒரு நபருக்கு 30 ஆயிரம் ரூபாய் அனுமதிக்கப்பட்டுள்ளது. ஓட்டுப்பதிவு இயந்திரங்களை அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு சென்று பெற்றுக்கொண்டு, கன்ட்டெய்னரில் புக் செய்து அனுப்பிவிட்டு மீண்டும் விமானத்திலே பறந்து வர உள்ளனர். தேனி, திண்டுக்கல் மாவட்ட அதிகாரிகளுக்கு விமானத்தில் பறக்கும் வாய்ப்பு இல்லை. காரணம் இந்த இரு மாவட்டங்களில் பழைய இயந்திரங்களே பயன்படுத்தப்படுகின்றன.
உங்கள் மாவட்ட தொகுதிகளின் முழுமையான தேர்தல் தகவல்களை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்


