தத்கல் பாஸ்போர்ட் ரத்து இல்லை: ஐகோர்ட்
தத்கல் பாஸ்போர்ட் ரத்து இல்லை: ஐகோர்ட்
தத்கல் பாஸ்போர்ட் ரத்து இல்லை: ஐகோர்ட்
சென்னை : தத்கல் பாஸ்போர்ட் வழங்கும் முறையை ரத்து செய்யக்கோரிய மனுவை தள்ளுபடி செய்த சென்னை ஐகோர்ட், 'தத்கல் பாஸ்போர்ட் வழங்கும் போது, நிபந்தனைகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்' என உத்தரவிட்டுள்ளது.
சென்னை ஐகோர்ட்டில் வீரராஜேந்திரன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், 'தத்கல் பாஸ்போர்ட் வழங்குவதில் பல முறைகேடுகள் நடக்கின்றன.
மனுவை விசாரித்த தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு: தத்கல் முறையில் பாஸ்போர்ட் வழங்குவதற்கு முன், நிபந்தனைகளையும், வழிமுறைகளையும் கண்டிப்புடன் வெளியுறவு அமைச்சகம் பின்பற்றும் என நாங்கள் நம்புகிறோம். குறுகிய காலத்துக்குள் வெளிநாடு செல்ல வேண்டியவர்களுக்காக, பாஸ்போர்ட் வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கம். இவர்கள் போலீஸ் விசாரணைக்காக நீண்ட நாட்கள் காத்திருக்க முடியாது. மருத்துவ காரணங்களுக்காக அல்லது வேறு அவசர காரணங்களுக்காக ஒருவர் வெளிநாடு செல்ல வேண்டியதிருக்கும். இவர்கள் தத்கல் பாஸ்போர்ட் பெற உரிமையுள்ளது. இத்தகையவர்களின் நலன்களுக்காக தான் இந்த தத்கல் பாஸ்போர்ட் திட்டம் கொண்டு வரப்பட்டது. எனவே, தத்கல் பாஸ்போர்ட் வழங்காமல் இருப்பதற்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்ற கேள்வியே இல்லை. மத்திய அரசு வகுத்துள்ள நிபந்தனைகள், வழிமுறைகளை கண்டிப்புடன் பின்பற்றியே, தத்கல் பாஸ்போர்ட்டுகளை வழங்க வேண்டும் என நாங்கள் வலியுறுத்துகிறோம். இவ்வாறு 'முதல் பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது.


