Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/பசுமைக் குடில் அமைக்க 50 சதவீத மானியம்

பசுமைக் குடில் அமைக்க 50 சதவீத மானியம்

பசுமைக் குடில் அமைக்க 50 சதவீத மானியம்

பசுமைக் குடில் அமைக்க 50 சதவீத மானியம்

ADDED : ஜன 04, 2011 10:47 PM


Google News

கொட்டாம்பட்டி:''கொட்டாம்பட்டியில் பசுமைக்குடில் அமைத்து சாகுபடி செய்யவிரும்பும் விவசாயிகளுக்கு 50 சதவீத மானியம் வழங்கப்படும்,'' என தோட்டக்கலை உதவி இயக்குனர் வெங்கடேஸ்வரி கூறியுள்ளார்.

இதுபற்றி அவர் கூறியதாவது:500 சதுர மீட்டரில் இரும்பு பைப்பால் பசுமைக்குடில் அமைக்க 4.67 லட்சம் ரூபாய் செலவாகும். இதில் 50 சதவீத பின் மானியமாக அரசால் வழங்கப்படுகிறது. அதிகபட்சமாக ஒரு நபருக்கு 1000 சதுர மீட்டர் பரப்பளவில் பசுமைக்குடில் அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. உயர்ரக, வீரியஒட்டு காய்கறி பயிர்களையும், ஏற்றுமதிக்கான கொய்மலர்களையும் சாகுபடி செய்யலாம். இதன்மூலம் திறந்தவெளி சாகுபடியைவிட மூன்று மடங்கு கூடுதல் மகசூல் பெறலாம். மேலும் ஆண்டு முழுவதும் சாகுபடி செய்யலாம், என்றார். பயன்பெற விரும்புவோர் மேலும் விவரங்களுக்கு கொட்டாம்பட்டி வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow Us