/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க செயற்குழு கூட்டம்ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க செயற்குழு கூட்டம்
ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க செயற்குழு கூட்டம்
ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க செயற்குழு கூட்டம்
ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க செயற்குழு கூட்டம்
ADDED : ஜன 04, 2011 10:25 PM
திட்டக்குடி : திட்டக்குடியில் ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க சிறப்பு செயற்குழு கூட்டம் நடந்தது.
தலைவர் ராமசாமி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் தமிழ்பெருவளத்தான், பிச்சமணி முன்னிலை வகித்தனர். செயலர் பன்னீர்செல்வம் வரவேற்றார். துணைச் செயலர் சந்திரன், சதாசிவம், தனபால், செல்லமுத்து, கலாமணி உட்பட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில் குடும்ப ஓய்வூதியர் மருத்துவ உதவி விருப்பத்தினை நீட்டித்து தர வேண்டும். 1988 ஜூன் 1க்கு பின் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான தேர்வு நிலை குறித்த அரசாணை 207ஐ விரைந்து செயல்படுத்த தொடக்கக் கல்வி அலுவலரை கேட்டுக் கொள்வது. வரும் 9ம் தேதி கடலூரில் நடைபெறும் மாவட்ட இரண்டாவது மாநாட்டில் அனைவரும் பங்கேற்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சாந்தப்பன் நன்றி கூறினார்.


