Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/நான்கு குழந்தைகளின் தாய் தீயில் கருகி பலி: கணவர் படுகாயம்

நான்கு குழந்தைகளின் தாய் தீயில் கருகி பலி: கணவர் படுகாயம்

நான்கு குழந்தைகளின் தாய் தீயில் கருகி பலி: கணவர் படுகாயம்

நான்கு குழந்தைகளின் தாய் தீயில் கருகி பலி: கணவர் படுகாயம்

ADDED : ஜன 02, 2011 11:43 PM


Google News

கடலூர் : சமையல் செய்தபோது ஸ்டவ் வெடித்ததில் நான்கு குழந்தைகளின் தாய் பரிதாபமாக இறந்தார்.

காப்பாற்றச் சென்ற கணவர் படுகாயமடைந்தார். குமராட்சியை அடுத்த வீரநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன். இவரது மனைவி மலர் செல்வி(36). திருமணமாகி 18 ஆண்டாகும் இவர்களுக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை மலர்செல்வி மண்ணெண்ணை ஸ்டவ்வில் சமையல் செய்தபோது எதிர்பாராத விதமாக சேலையில் தீபிடித்து உடல் முழுவதும் பரவியது. அலறல் சத்தம் கேட்ட அவரது கணவர் மோகன் ஓடிச் சென்று தீயை அணைக்க முயன்றார். அதில் படுகாயமடைந்த இருவரையும் அக்கம் பக்கத்தினர் காப்பாற்றி சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மலர்செல்வி இறந்தார். மோகனுக்க தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து குமராட்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us